Saturday, April 30, 2005

உலோகப்பறவை வர்த்தகமும் உலக அரசியலும்

உலோகப்பறவை வர்த்தகமும் உலக அரசியலும்

ஏர் இந்தியா போயிங் விமானங்களுக்கு ஆர்டர் கொடுத்ததின் பின்னே இருக்கும் உலக வர்த்தக அரசியல் குறித்து பல விவரங்கள் வெளிவரத்தொடங்கியிருக்கின்றன.

ஏர்பஸ் கன்ஸார்டியம் இரண்டுதள அசுர விமானத்தின் வெள்ளோட்டம் வெற்றியானது குறித்து, ஷாம்பெய்ன் பாட்டில்களைத் திறந்த நேரத்தில் இந்த போயிங் ஆர்டர் , ஏர்பஸ் நிறுவனத்தை சற்றே ஆட வைத்துவிட்டது. வர்த்தகத்தின் மதிப்பு அப்படி..

கிளின்Tடன் அரசின் முக்கிய பொறுப்பிலிருந்த தாமஸ் பிக்கரிங், போயிங்-கில் வைஸ் ப்ரசிடென்Tட்டாக, புஷ் அரசு பொறுப்பேற்றதும், சேர்ந்தது நடந்தது 2001-ல். இதன் பின்னணி குறீத்து அமெரிக்கப் பத்திரிகைகள் "புது அரசு, தனக்கு ஆதரவாக உலக அரசியலில் பேசுவதற்காகவே, அரசியல் புள்ளியான பிக்கரிங்-கை போயிங் எடுத்திருக்கிறது" என்னுமளவிற்கு துக்கடாவாகச் செய்தி வெளியிட்டுவிட்டு, ஒதுக்கிவிட்டன.
இந்தப்பின்னணியில் சீனாவும், இந்தியாவும் விமானப் போக்குவரத்தில் பெருமளவில் முன்னேற்றமடையும் என்னும் எதிர்பார்ப்பில் இரு விமானக் கம்பெனிகளும் 2002-ல் இருந்தே தங்கள் வேலையைத் தொடங்கிவிட்டன. சீனாவின் விமானப் போக்குவரத்து , பலமடங்காகப் பெருகிவந்தாலும், 2008 ஒலிம்பிக் விளையாட்டிற்காக சீனா தனது விமானதளங்களை நவீனப்படுத்திப் பெரிதுபெரிதாகக் கட்டிவருகிறது. எனவே, முதல் கவனம் , இக்கம்பெனிகளுக்கு சீனாதான்.

திடீரென ஏர் இந்தியா போயிங்-கிற்கு ஆதரவாக முடிவெடுத்ததில் அண்மையில் அமெரிக்க போக்குவரத்து செக்ரட்டெரி நார்ம் மினேட்டா,இந்தியா வருகை என ஒரு பின்னணி இருக்கிறது. போயிங் , அவரது தேர்தலுக்கு பணம் கொடுத்திருந்தது எனச் சொல்லப்படுகிறது. நார்ம் மினேட்டாவின் வருகையின் பின்னும், கொண்டலீஸா ரைஸ் வந்திருந்த போதும்,போயிங் தனது விற்பனை நுட்பங்களை உச்சப்படுத்தியது.
ஏர்பஸ் சும்மாஇருக்கவில்லை எனினும், அதன் lobbying power சற்றே குறைந்திருந்தது எனவும், "இவர்கள் காலம் காலமாகப் பேசிவருகிறார்கள். எங்கே வாங்கப்போகிறார்கள்?" என்ற அலுப்பும் அலட்சியமும் அவர்கள் தரப்பில் சற்று மேலோங்கியிருந்ததெனவும், உள்நாட்டு விமானத் துறையில் கூறுகிறர்கள். இந்த நேரத்தில்.. ஏர் இந்தியா தனது முடிவை வெளியிட்டு அதிர்ச்சியளித்தது.

ஏர் பஸ் கன்ஸார்டியம், " ஏர் இந்தியாவின் முடிவில் ஏதோ இருக்கிறது" என Central Vigilance Committee இடம் புகார் செய்திருக்கிறது.
அமெரிக்கா f16 விற்கிறது என்றால் டெக்ஸாஸ் மாநிலத்தில் ஆயிரக்கணக்கானோரின் வேலை தக்கவைக்கப்பட்டிருக்கிறது என்னும் அமெரிக்க உள்நாட்டு அரசியல்தானே ஒழிய, சாதாரண டெக்ஸஸ் குடிமகனுக்கு, இந்தியா பாகிஸ்தான் யார் வாங்கினால் என்ன? யார் மேல் குண்டு போட்டால் என்ன?

போயிங் விமானங்கள் அமெரிக்காவின் எந்த விமானதளத்திலிருந்து இந்தியாவின் எந்தப் பன்னாட்டு விமானதளத்திற்கும் நேரடி விமானப் போக்குவரத்து நடைபெற வழிவகுக்கும் எனவும் , குறைந்த எரிபொருள் செலவாக்கும் தொழில் நுட்பமுள்ளவை எனவும் ஏர் இந்தியா தரப்பில்சொல்லப் பட்டாலும்...
உலோகப்பறவை வர்த்தகம் , உலக( அமெரிக்க) அரசியல் நிலை கொண்டே அமைந்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.

2 comments:

  1. நாடோ டி.
    தங்கல் பின்னுட்டத்திற்கு நன்றி. ஐரோப்பாவின் வர்த்தகம் இந்தியாவிற்கு மிக முக்கியம். உணவுப் பொருட்கள் ஏற்றுமதி ( திராட்சை, மீன்,), உடைகள் ஏற்றுமதி நிலவரத்தில் பார்த்தால்,ஐரோப்பிய நாடுகள் நமக்கு எந்த அளவிற்கு முக்கியனெத் தெரிகிறது. தலைவலியும் கூடவே வருவதைத் தடுக்க முடியவில்லை.
    1992-94களில், நமது உடை ஏற்றுமதியால், உள்நாட்டு ஆடை நிறுவனங்கள பாதிக்கப்படுவதாகக் கவலைப்பட்ட சில ஐரோப்பிய நாடுகள் ( ஜெர்மனி முதலாக), azodyes- banned amines முதலியன நமது ஆடைகளில் உபயோகித்த நிறக்கலவைகளில் இருப்பதாகக் கூறி ,தமது இறக்குமதியை நிறுத்திக்கொண்டன. அலறிப் புடைத்து, எல்லா சோதனைகளையும் செய்வதற்காக, அரசாங்க அளவிலும், தொழிலதிபர்கள் சங்க அளவிலும் கோடிகோடியாகப் பணம் செலவழிக்கப்பட்டது.

    சமீபத்தில், இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மீன், ப்ராண்(Prawn & shrimp)முதலியவற்றில் antibiotics அதிகமாக இருப்பதாகக் கூறி, ப்ரான்ஸ் தடைவிதித்தது. மீண்டும் அதே கதிதான்.

    மஹாராஷ்ட்டிராவிலிருந்து திராட்சை ஏற்றுமதை ஐரோப்பாவிற்கு மிக அதிகம். 1-2 மாதங்கள் மட்டுமே இது சாத்தியம். அதற்குள் கன்tடெய்னர்களில் ஏற்றியாக வேண்டும்.

    இதெல்லாம் கணக்கில் எடுத்துக்கொண்டுதான் இந்தியன் ஏர்லைன்ஸ் தனது விமானத் தேவைகளுக்கு ஏர்பஸ்-ஸை கொஞ்சம் தாஜா செய்துகொண்டிருக்கிறது. முதன் முதலாக A320 விமானத்தை வாங்கியது இந்தியன் ஏர்லைன்ஸ் என்பதையும் நாம் கவனிக்கவேண்டும். அன்றைய சூழ்நிலையில் அமெரிக்காவைவிட ஐரோப்பாவின் சார்பு தேவையாயிருந்தது.
    இப்போது. தனியார் விமான நிறுவனங்களுக்கும் , அரசாங்கம் " ஏர்பஸ்-ஸை கொஞ்சம் கவனியுங்கள்" என unofficial ஆகச் சொல்லிவருவதாகவும் கேள்வி.!

    ReplyDelete
  2. /// தனியார் விமான நிறுவனங்களுக்கும் , அரசாங்கம் " ஏர்பஸ்-ஸை கொஞ்சம் கவனியுங்கள்" என unofficial ஆகச் சொல்லிவருவதாகவும் கேள்வி.!///

    ஓ.. இதுதான் சமாச்சாரமா. சமீபத்தில் தனியார் விமான நிறுவனங்கள் ஏர்பஸ் விமானங்களை வாங்கப்போவதாய்க் கேள்விப்பட்டது நினைவுக்கு வருகிறது.

    ReplyDelete