Sunday, March 05, 2006

மூலக்கூறிலிருந்து மருந்து வரை

மூலக்கூறிலிருந்து மருந்து வரை
மூன்று மாதங்கள் முன் ஒரு ஞாயிற்றுக்கிழமை.
மருத்துவமனையில் அன்று கூட்டம் அதிகம் இல்லை. காலைத்தூக்கிவைத்துக்கொண்டு எனது ஊன்றுகோலை ஒரு மூலையில் சாய்த்துவைத்துவிட்டு பெஞ்சில் அமர்ந்தேன். கால் ஒடிந்ததின் பின் இரண்டாவது பரிசோதனைக்காக வரச்சொல்லியிருந்த தேதி இன்றுதானே எனச் சரிபார்த்துக்கொண்டேன். மருத்துவர் வ்ர இன்னும் நேரம் பத்து நிமிடங்கள் பாக்கியிருந்தன.
அருகே இருந்தவருக்கு ஐம்பது வயதிருக்கலாம். அவரோடு வந்திருந்த பெண்மணி , தள்ளு நாற்காலியிலிருந்து பெஞ்சில் மாறுவதற்கு கைத்தாங்கலாக பணிப்பெண் இல்லாது திணறினார். கொஞ்சம் இடம் கொடுத்து ஒதுங்கி, தள்ளுநாற்காலியை முன்னே செல்லாவண்ணம் பிடித்துக்கொண்டேன்.
நன்றி எனப் புன்னகைத்த பெண்மணி, " உங்களூக்கு என்ன?" என்றார். ரயிலிலிருந்து விழுந்த கதையைச் சொன்னேன். "நான் பாத்ரூமில் விழுந்துவிட்டேன். லோ பி.பி" என்றார்.
"என்ன மருந்து கொடுக்கிறான்கள்? கால்வலி குறையறதுக்கு கொடுத்த மாத்திரையிலே வயித்துவலி வந்துடுச்சு. ஒரு வாரமா ஒண்ணுமே சாப்பிட முடியலை. வெறும் தயிர்சாதம்தான். மாட்டுப்பொண் வேலைக்குப் போறா. அவசரத்துல எனக்குன்னும், அவளுக்குன்ன்னும் தனித்தனியா சாதம் பண்ணமுடியுமா? " எனப் புலம்பினார்.
"இவளுக்குக் கொடுத்த மாத்திரைல வந்த பக்க விளைவுதான் இந்த வயித்துவலி. அதுக்குமுன்னாடி வயித்துவலியெல்லாம் வந்ததே இல்லை இவளுக்கு" கோபத்தில் அவரது கணவரின் வார்த்தைகள் தடுமாறின.
"டாக்டர் கொடுத்த மாத்திரை இதுவரை நான் கேட்டதேயில்லை. கடைல, இது புதுசு சார்-ங்கிறான். இவங்க சோதனை பண்ண இவள்தான் கிடைச்சாளா?"
"ஒரு மாத்திரை என்னமாதிரி விளைவுகளை ஏற்படுத்தும் என சோதனைகள் செய்யப்பட்டபின்னரே சந்தைக்கு வருகிறது. எதுக்கும் டாக்டர்கிட்ட சொல்லுங்க" என்றேன்.
அவர் சமாதானமானதாய்த் தெரியலை." மாத்திரை எப்படிப் பண்ணறாங்கன்னு நமக்கு என்ன தெரியும்? இவள் மாதிரி எத்தனை பேர் மேல சோதனை பண்ணறாங்களோ? என்ன எழவுன்னு சொல்லித்தொலைக்கலாம்ல?" என்று முணுமுணுத்தார்.
அவரது கேள்வி புதியதில்லை.
நம்மில் பலருக்கும் வரும் கேள்விதான் இது. எப்படி ஒரு கெமிக்கல் ஒரு மருந்தாகிறது? எப்படி அதன் விளைவுகளையும், பக்க விளைவுகளையும் அனுமானிக்கிறார்கள்? என்னமோ எலி,குரங்கு,குதிரை,மனிதன் என சோதிப்பார்களாமே? அதற்குப்பிறகும் எப்படி சில மருந்துகள் விஷமாகின்றன? போனவாரம் பார்வை மங்கலாய் இருந்ததே - நாம் தலைவலிக்கு எடுத்துக்கொள்ளூம் மருந்துதான் காரணமோ? எனப் பலப்பல சந்தேகங்கள்..

அலோபதி மருந்துகள் தயாரிக்கப்படும் நிலைகள் பற்றி கொஞ்சம் மேலோட்டமாய்ப் பார்ப்போம்.
ஒரு disclaimer : எனக்குத் தெரிந்ததைச் சொல்கிறேன். இது முழுதும் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக் கட்டுரையில்லை.
தெரிந்தவர்கள் திருத்தவும். சந்தோஷமாக ஏற்றுக்கொள்கிறேன். நானும் புரிந்துகொள்கிறேன்.

5 comments:

  1. இதைப்பற்ரி விவரமாக நான்கு பகுதிகளாக பிரித்து எழுத வேண்டும் என்று எண்ணி இருந்தேன். அலுவலக வேலை சுமைகளால் முடியாமல் போனது. நீங்கள் எழுதுங்கள், நான் நிர்வகித்த சில திட்டங்கள் பற்றீயும் பின்னூட்டங்களில் கொடுக்கிறேன்.

    ReplyDelete
  2. நீங்கள் சொல்வது அங்கீகரப்பட்ட மருத்துவ நிறுவனங்களின் தரக் கட்டுப்பாடு. எழுதுங்கள் ,பயனுள்ளதாக இருக்கும். ஆனால் spurious மருந்துகள் பற்றியும் எழுதுங்கள். பரிந்துரைக்கப்பட்ட மருந்து வாங்கியும் குணமாகாத சம்பவங்களும் உண்டு.

    ReplyDelete
  3. நன்றி பத்மா அவர்களே,
    மருத்துவர் என்ற முறையில் உங்களது பின்னூட்டங்களும் கருத்துகளும் மிக்க பயனுள்ளதாக இருக்கும். மருந்து கண்டுபிடிப்பு நிலையிலிருந்து சந்தைக்கு வரும் வரையில் இருக்கும் நிலைகள் குறித்து எழுதுகிறேன். சந்தையில் நடக்கும் ஒழுங்கீனங்கள் மற்றோரு விடயம்!
    அன்புடன்
    க.சுதாகர்.

    ReplyDelete
  4. நன்றி மணியன்,
    எனது அறிவு ஆராய்ச்சிசாலைகள்/தயாரிப்பு வரையே. spurious drugs குறித்து எழுதுவது சந்தைக்கு மருந்து வரும்நேரம்/வந்தபின் வரும் ஒழுங்கீனம். இது குறித்து பின் விலாவரியாக அலசலாம்.
    அன்புடன்
    க.சுதாகர்

    ReplyDelete
  5. நன்றி சாரா,
    வெளியூர் சென்றிருந்ததால் மறுமொழியில் காலதாமதம்.. மன்னிக்கவும்.
    அன்புடன்
    க.சுதாகர்.

    ReplyDelete