ரொம்பநாளாச்சி, ஒரு சவத்தெளவு பதிவு போட்டு..
”காலிஃப்ளவர் விலை பெருமளவு வீழ்ச்சி.
கடை மூலையில் கொஞ்சமாக இருந்த காலிஃப்ளவரைப் பாத்தா சந்தேகமா இருந்தது.
“என்ன விலைப்பா?”
“ஐம்பது ரூவா கிலோ”
என்னது? இந்த சீசன்ல ஃப்ளவர் அஞ்சு ரூபாய்க்கு கிலோ-ன்னு சீரழியும். இவனுக்கு பைத்தியமா?
அடுத்தடுத்த கடையிலும் இதே கதைதான்.
“என்ன விலைப்பா?”
“ஐம்பது ரூவா கிலோ”
என்னது? இந்த சீசன்ல ஃப்ளவர் அஞ்சு ரூபாய்க்கு கிலோ-ன்னு சீரழியும். இவனுக்கு பைத்தியமா?
அடுத்தடுத்த கடையிலும் இதே கதைதான்.
“பத்து கிலோ இந்த லைன்ல மட்டும் காலேல எடுத்துட்டு வந்தோம்ங்க. அதோ, வர்றாரே, அந்த மதராஸி பாய்சாப் எல்லாத்தையும் வாங்கிட்டுப் போயிட்டாரு. என்ன பண்ணச் சொல்றீங்க?”
திகைத்தேன்.
இது.. நம்ம ச.வ.ச செக்ரெட்டரியல்லவா? வேலில போற ஓணான் இப்ப வேட்டி வரைக்கும் வந்துருச்சே?
”அண்ணாச்சி, எப்படி இருக்கீய?” என்றார் மனிதர் பாசமாக.. “.வீட்டுக்கு வாங்க. என்ன சாப்புடுதீய? ஃப்ளவர் ஜூஸு குடிப்பீயளா?”
காலிஃப்ளவர் ஜூஸா?
“இந்தாரும், என்ன திடீர்னு காலிஃப்ளவர் பக்கம் இப்படி ஒரு காதல்?”
“பேலியோ டயட்ல இருக்கேம்ம்லா? ஃப்ளவர்ல இட்லி, ஃப்ளவர் சோறுன்னு எல்லாம் காலி ப்ளவர்தான் இப்ப. முப்பது நாள்ல மூணு கிலோ குறைஞ்சிருக்கேன்”
“யோவ் நீரு குறைஞ்சது இருக்கட்டு. காலிஃப்ளவர் விலை ஏறிக்கிடக்கு. நாட்டுல சவத்தெளவு வளந்து கிடக்கா மாரி. பத்து கிலோவாவே ஒரு மனுசன் திம்பான்? பதுக்கறதுக்கு ஒரு அளவில்லையா?”
“இந்தாரும்” என்றார் கோபத்தில் முகம் சிவந்து. “ மத்தவங்க என்ன ஆனா எனக்கென்ன? நான் நல்லா இருக்கணும். “
“இதுக்கு முந்தி எந்த கட்சியில இருந்தீரு?”
”காங்கிரஸ். இந்த காலிஃளவர் பத்தாக்குறைக்கு மோதி தான் காரணம்”
“அதாஞ்சரி. இப்ப ?”
“ஆப்பு”
‘சுத்தம். யோவ். மத்தவங்களை வாழ விடணும்”
அவர் மசிவதாயில்லை.
“வே” என்றேன் இறுதியாக “ உடம்பு சுருங்கி வந்துச்சுன்னா, மூளையும் சுருங்கும்லா?”
அவர் யோசித்து “ ஆமா , ஏங் கேக்கீரு?“ என்றார்.
“ கமலஹாசன் மாரி பேசுதீரே? அதான் “
“யாத்தீ” என்றார் அலறி “ ,கமலஹாசன் மாரி உளறுதேனா? அப்ப எம் மூளையும் சுருங்கிட்டோ?”
”அதெல்லாம் இருக்கறவங்க கவலைப்படணும் . சொல்லி வைக்கேன். உளறினாலும், அதுல ஒரு லிமிட்டு இருக்கணும். அதிகம் ப்ளவர் தின்னா, இப்படி ஆயிருவீரு”
பயத்தில் நடுநடுங்கிப் போனார் . “ சரி, சொல்றதுதான் சொல்லுதீரு. ஒரு நல்ல ஆளாப் பாத்துச் சொன்னா என்னா? நானும் கொஞ்சம் சந்தோசப்படுவேம்லா?” என்றார்.
“ஒமக்காண்டி ஒரு வெண்பா சொல்லுதேன். கவர்ச்சியான பொண்ணாச் சொன்னாப் பொலம்பாம இருப்பீர்லா?
“பேலியோ தப்பினால் அண்ணாச்சி!வந்திரும்
ஆலியா பட்டின் அறிவு”
ஆலியா பட்டின் அறிவு”
அடுத்த நாளில் டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் முதல் பக்கச் செய்தி.
”காலிஃப்ளவர் விலை பெருமளவு வீழ்ச்சி.
மும்பை கோரேகான்வ் பகுதியில் மக்கள் பொருத்தமே இல்லாமல் கமலஹாசனுக்கு நன்றி தெரிவித்து வீடுகளில் மகாபாரதம் படித்தார்கள். ”
பேலியோ நண்பர்கள் மன்னிக்கவும். . ஜோரா கை தட்டிட்டுப் போயிருங்க.
சனியன் பிடிச்ச கத, நல்லா இருக்கண்ணே. எளவு பிடிச்ச கதய படிச்சி படிச்சி ரசிச்சேன் பார்த்துக்கிடும்.
ReplyDelete