இந்தி, இந்தியாவின் தேசிய மொழியா?
இந்தனை நாள் கழித்து எழுதவர்றவன் ஒழுங்கா வேற எதாச்சும் எழுதக்கூடாதா? எனக் கோபப்படுபவர்கள் சிறிது பொறுக்கவும்.
ஜெயா பச்சன் குண்டக்க மண்டக்க எதோ பேசப்போக, ராஜ் தாக்கரே வரிந்துகட்டிக்கொண்டு " உ.பி பையாக்களே, அலகாபாத் ரயில் இந்த பிளாட்பாரத்தில் வரும்" எனக் கையை காடியது நேற்றுத்தான் என்றாலும்...
"சரிடே, என்னதான் இருந்தாலும், இந்திதானே இந்தியாவின் தேசிய மொழி?" எனப் பலர் நேர்மையாகப் பேசுவதாக நினைத்துக் கொண்டு, ஜெயாவுக்கு பரிந்துவரும்போது, தெரியாத்தனமாக எனது நண்பர்கள் குழாத்தில் கேட்டுவிட்டேன்
"யார் சொன்னது இந்தி , இந்தியாவின் தேசியமொழி என்று?" என...
அவனவன் அடிக்காத குறை...
"ஸ்கூலில் படிக்கலையாக்கும்? "
" நீ தமிழ்நாடுக்காரன்.. அதுதான் இந்தி வெறுப்பு.. தேசியமொழி இல்லை எனச் சொல்லும் அளவு வெறி"
என 'நான் இந்தியனே இல்லை, நாட்டுப்பற்றே கிடையாது' என்ற அளவுக்கு பேச்சு..
சான்றுக்கு நான் விக்கிப் பீடியாவை அழைத்தாலும், பல இணையதளங்கள் இன்னும் "இந்தி இந்தியாவின் தேசிய மொழி" என எழுதியிருக்கவே, அங்கும் தகறாறு.
இந்திய அரசியல் கோட்பாடு 343 இந்தி மொழி, தேவனாகரி எழுத்தில், யூனியன் அரசின் அலுவல் மொழி" என மட்டுமே சொல்லியிருக்கிறது.
தேசிய மொழி என எந்த மொழியும் அறிவிக்கப்படவில்லை என எனக்குப் பண்டு படித்தாக நினைவு.
தெரிந்தவர்கள் கூறவும்... இந்தி தேசிய மொழியா?
கண்டிப்பாக இல்லை. இந்தி இந்தியாவின் அலுவல் மொழி மட்டுமே. நீங்கள் சொன்னது போல் Wikipedia-வில் தெளிவாக சொல்லி இருக்கிரார்கள். Wikipedia வேண்டாம் என்றால், இந்திய அரசின் இணையதளம் இதை சரியாக விளக்கும்.
ReplyDeletehttp://india.gov.in/knowindia/india_at_a_glance.php
இதில், “people” என்னும் தலைப்பில், “Languages” என்னும் உபதலைப்பை உங்கள் நண்பர்களூக்கு காட்டுங்கள். இந்தி தேசிய மொழி இல்லை என்பதை தெரிந்து கொள்ளாதது அவர்கள் தவரு இல்லை. நம் தமிழ் மற்றும் வரலாற்று ஆசிரியர்களின் தவரு.

நன்றி நளன் அவர்களே,
ReplyDeleteஉங்கள் மறுமொழிக்கு மறுமொழியாக மற்றொரு பதிவு இட்டிருக்கிறேன் ( நீண்டுவிட்ட காரணத்தால்)