மனக்கணக்கு, சுடோக்கு, குறுக்குப் புதிர்கள் போன்றவை நினைவு
அழிதலான அல்ஸைமர் நோயைத்
தடுக்குமா?
சிவனே-ன்னு போயிட்டிருந்த என்னை
‘சூ’ன்னு சொல்ல வைச்ச
பாவம்
Kala Venkat மற்றும் Geetha M Sudharsanam அவர்களையே சாரும்.
நான்
பண்ணலை
( காமோ
கார்ஷீத், மன்யுப
கார்ஷீத், நமோ
நமஹ
என்பார்களே அதுப்போல காமம்
செய்தது, மனசு
செய்தது.. நான்
செய்யலை” )
கணக்கில் புலியாக இருந்த
மூதாட்டி, மிக
முதிர்வயதில், எப்படி
நினைவு
தவறினார் என்பதை
கலா
கூறினார். கீதா
அவர்கள் , அவரது
அன்னையாருக்கு, சுடோக்கு எப்படி
நினைவு
குவியத்தைத் தந்தது
என்பதாகச் சொன்னார்.
இந்த
இரு
நிகழ்வுகளும் எல்லைகளாக எடுத்துக்கொண்டால், யதார்த்தம் நடுவே
எங்கோ
நிற்கிறது. அறிவியல் ஆய்வுகளும் தெளிவாக ஒன்றும் சொல்லிவிடுவதில்லை. கூகிளில்
பார்த்தீர்களென்றால், குழப்போ குழப்பு என்று குழப்பியிருப்பது தெரியும்.
சரி, நமக்குத் தெரிந்த ஒருத்தரைக்
கேட்கலாமே என்று பார்த்தால் , அவர் அதற்கும் மேலே “ சில நோயாளிகளுக்கு இது ஒத்து
வருது. அது அவர்கள் எந்த அளவு , சுய சிந்தனையோடு, ஒரு முயற்சியோடு போட்டுப்
பாக்கறாங்கங்கறதை பொறுத்து. ந்யூரான் பாதைகள் புதிதாக 60 வயசுக்கு மேல
உருவாகுதுன்னு சொல்றாங்க. செமினார்ல கேட்டேன்” என்று விட்டேத்தியாகப் பதில்
சொல்லிவிட்டு, ஒரு மெடிக்கல் ரெப் தந்த ஓசிப் பேனா ஒன்றை பரிசாகக் கொடுத்து
அனுப்பிவிட்டார்.
அல்ஸைமர் பரம்பரை பரம்பரையாகவும் வர
சாத்தியம். ஆனால் ஒரே முட்டையிலிருந்து வந்த ரெட்டைக் குழந்தைகள் டி.என்.ஏ ஒரு
போலவே இருந்தாலும், அவர்கள் பண்புகள் மாறுவது போல, அவர்களுக்கு அல்ஸைமர் வரும்
சாத்தியமும், வந்தால் அதன் தீவிரம், தாக்கும் காலம் என்பனவும் மாறியிருக்கும்
என்கிறது ஒரு பேப்பர். அதான் எனக்குத் தெரியுமே? என்று தங்கவேலு ஜோக் நினைவு
வந்தாலும், “என்ன ம****த்துக்கு எழுதறான்? ” என்ற கெட்டவார்த்தைக் கேள்வியும்
எழாமல் இல்லை.
எனவே… ஆங்? என்ன சொல்லிட்டிருந்தேன்?
நல்ல பதிவு. பதிவு எங்க?
ReplyDelete