Sunday, April 24, 2016

பேஸ்புக்-கில் நட்பெனும் அபாயங்கள்.

நேற்று எனது நண்பர் இந்த நிகழ்வைப் பகிர்ந்து கொண்டார்.
அவரது பெண் போனவருடம் 12ம்வகுப்பை முடித்து காலேஜில் சேர்ந்தாள். புத்திசாலி, துறுதுறுவென்று இருப்பாள். அதோடு டேபிள் டென்னிஸ், பெண்களுக்கான மராத்தான் என்று பலவற்றிலும் முழுதுமாக ஈடுபட்டவள்.
போன செமஸ்டர் பரீட்சையின்போது ஏதோ டல்லாக இருந்தாள் எனவும், மதிப்பெண்கள் எதிர்பார்த்த அளவு வரவில்லை எனவும் நண்பர் கவனித்தார். போகிறது, கல்லூரி சூழலுக்கு இன்னும் அட்ஜஸ்ட் செய்யவில்லை போலிருக்கு என விட்டுவிட்டார். இந்த முறையும், செமஸ்டர் லீவு நேரத்தில் அதே இறுகிய முகம், தளர்ந்த , வெறித்த பார்வை.
ஏதோ சரியில்லை எனப் புரிந்து கொண்ட பெற்றோர்கள், பெண்ணோடு பேசிப்பார்த்தனர். அம்மாவிடம், அவள் அழுதுகொண்டே தனது பேஸ்புக் பதிவுகள், சாட்செய்திகளைக் காட்டினாள். எதோ ஒரு பெண்ணின் பெயர்... முதலில் அன்பான வார்த்தைகள். அதன்பின் திடீரென திட்டுகள். சரமரியாக அவளது கேரக்டரைக் குறி வைத்த ஏச்சு மொழிகள். அதோடு நீ ஒரு முட்டாள் , உன்னால இந்த எக்ஸாம் எழுத முடியாது. பெயிலாகப்போவாய்,என அடிக்கடி வசனங்கள்.
“யாருடி இது?”
“தெரியலேம்மா. யாரோட ப்ரெண்டோ என்கூட இருக்கா. போனதடவ எக்ஸாம் எழுதும்போது மட்டும்தான் இப்படி வந்தது. அதுக்கப்புறம் எழுதலை. இப்ப எக்ஸாம் நேரத்துல ..”
நண்பர் சைபர் க்ரைம் போலீஸை நாடினார். அவர்கள் இந்த ஐ.டி, சமீபத்தில் அந்தேரியில் இருந்து பயன்படுத்தப்பட்டது என்று அறிந்தனர். நூல் போட்டுப் பிடித்ததில் பயல் சிக்கினான்.
அவன் , தனது சகோதரியின் தூண்டுதலில் எழுதியதாகச் சொன்னான். அந்தப்பெண், இவளது தோழி. பள்ளிக்காலத்தில் இருந்தே ஒன்றாகப் படித்தவள்.
’விசாரித்ததில்’ , இவளது படிப்பில் பொறாமை கொண்டு, கல்லூரியிலாவது இவளுக்கு அதிகம் மார்க் வந்துவிடக்கூடாது என்பதற்காக இப்படிச் செய்ததாக ஒப்புக்கொண்டாள். அந்தப் பெண்ணின் பெற்றோருக்கு மிகக்கடுமையான அதிர்ச்சி. இவளா இப்படி? என்று இன்று வரை இரு குடும்பத்திலும் கேட்டவண்ணம் இருக்கிறார்கள்.
தெரியாதவர்கள்தான் பேஸ்புக்கில் தொந்தரவு கொடுக்க வேண்டுமென்பதில்லை. தெரிந்தவர்களுக்கும் உள்ளிருக்கும் பிசாசு வெளிவர முகமற்ற, போலிமுகம் சாத்தியமான சமூக ஊடகங்கள் ஒரு தளத்தைக் கொடுக்கின்றன.
ஊடகங்களில் பேச்சு ஒரு மாதிரியாகப் போனால், தயவு தாட்சணியம் பார்க்காது கத்தரித்து விடுங்கள். நிஜமான பத்து நல்ல நண்பர்கள் போதும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு குரங்கோடு குதித்துக்கொண்டிருக்க உங்களுக்கு நேரம் இருக்காது. வாழ்வு பேஸ்புக்கில் வாதம் செய்வதற்கு இல்லை

4 comments:

 1. இந்த பேஸ்புக்கை சரியாகக் கையாளத் தெரியாவிட்டால் மிகுந்த சங்கடங்கள் வர வாய்ப்பிருக்கிறது. என்னையே (82 வயதான என்னையே) ஒருத்தன் ஹோமோ வலையில் சிக்கவைக்கப் பார்த்தான். நான் சுதாரிப்பாக இருந்ததால் அவனை முற்றிலுமாக கட் பண்ணினேன். இளம் வயதுக்காரர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

  ReplyDelete
 2. என்ன ஒரு மனிதர்கள். மனித மனம் புரிந்து கொள்ள முடியாதது.

  ReplyDelete
 3. Sorry for using English as Tamil Font is not supported in my system. I totally agree with you Sudhakar ! We need to be very careful in using FB, though I was using FB between 2009 to 2014 now I've completely deactivated my account, because instead of providing the relaxation FB has become a Gossip Junction, also people are to trying you to follow their favorite Leader/Parties/Actors etc and If we try to counter their view you got abused by the related group. Also as mentioned by Shri Kandhasway, there are lot of GAY's and HOMO's are roaming around FB !

  ReplyDelete
 4. கண்டிப்பாக இது தேவையில்லாத ஒன்று தான்..
  அல்லது சில கட்டுப்பாடுகள் வைத்து உபயோகிக்கலாம்..
  தெரிந்த நண்பர்கள், உறவினர்களுடன் மட்டுமே Facebook ல் நட்பாக இருக்கலாம்.
  கண்டிப்பாக ஆண் ஆனாலும், பெண் ஆனாலும் தெரியாத நபரை சேர்க்க கூடாது, பெண்கள் கண்டிப்பாக தன் படங்களை அப்லோட் செய்ய கூடாது.
  சொல்லப்போனால் பெண்களுக்கு தேவையே இல்லை.
  ஆயிரம் கலாச்சார வேறுபாடுகள், பிரிவினைகள், சீர்கேடுகள், கொடூர சிந்தனைகள் நிறைந்த நம் நாட்டில் பெண்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
  Facebook ஆல் என்ன நன்மை கிடைக்கிறது என்று சிந்தித்து அதிலிருந்து வெளியே வாருங்கள்.

  ReplyDelete