Thursday, September 11, 2008

இந்தி, இந்தியாவின் ஆட்சி மொழியா? - 2

தேசிய மொழிக்கும் அலுவலகத் தொடர்பு மொழிக்கும் உள்ள வேறுபாடு புரிபடுவது கடினமல்ல எனினும், இதை விளக்க மெனக்கெட வேண்டும். மத்திய அரசின் மக்கள் தொடர்புத் துறை, மக்கள் தொடர்பு ஊடகங்கள் மூலம் இந்தி பிரசார அமைப்புகள் செய்த LOBBY ( தமிழில் என்ன பதம் இதற்கு?) 50களில் தொடங்கி 90கள் வரை நீடித்ததும் இதற்கு ஒரு காரணமே.

நளன் சொன்னதுபோல வரலாற்றுத்துறையின் தவறு என்றாலும், அதற்கான முதலீடும் ஆதரவும் டெல்லியிலிருந்து கிடைக்கும்போது உண்மைகள் புதைபடுவது ஆச்சரியமல்ல. தமிழ் தமிழ் எனக் கூப்பாடு போடும் திராவிட அமைப்புகள் இதனை பொதுமக்களுக்கு ( தமிழ்நாட்டில் மட்டுமல்ல) கொண்டுசெல்ல,பிற மாநிலங்களின் மொழி வளர்ப்புகழகங்களுடன் தொடர்பு கொண்டு முனைந்திருந்திருக்க வேண்டும். இவர்களுக்கு இதெல்லாம் செய்ய எங்கே நேரம்? வெறுமே இந்தி மொழிப் பலகைகளில் தார் இட்டு அழிப்பது புரட்சியாகாது.

தெருவோர அரசியலுக்கும் மொழி ஆர்வத்திற்கும் ஒரு சம்பந்தமுமில்லை. 60களில் நடந்த இந்தி திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தை பிற மாநிலங்கள் பார்த்த விதம் " தமிழ் வெறி/ இந்தி துவேசம்".

தெளிவாக பிற மாநிலங்களில் நம் நிலையை எடுத்துச் செல்லாதது எவர் குற்றம்? வங்கமும், வடகிழக்கும்கூட இந்தியை எதிர்க்கின்றன. அவர்களுக்கு இந்த அடைமொழி " வெறியர்கள் " இல்லை. நமக்கு மட்டுமே.

இந்தி எதிர்ப்பிற்கும் இந்தித் திணிப்பு எதிர்ப்பிற்கும் வித்தியாசம் இருக்கிறது. நாகரீகமான, ஆரோக்கியமான அரசியல் நமது நிலையை ஜனநாயகமான மொழிச்சுதந்திரத் தேவை என நிரூபித்திருக்கும். நமக்கு பக்க பலமும் கிடைத்திருக்கும். தவறி விட்டோம்

6 comments:

  1. Anonymous9:56 PM

    ஆங்கிலேயர்களிடமிருந்து வடஇந்தியர்களிடம் இந்தியாவின் ஆட்சி அதிகாரம் கைமாறியப் பிறகு... அதாங்க இந்தியா விடுதலை பெற்றதாக சொல்லப்பட்ட பிறகு இந்தியாவின் தேசிய மொழியாக எது இருக்க வேண்டும் என்ற விவாதம் அரசமைப்புச் சட்டம் உருவாக்கும் குழுவில் விவாதிக்கப்பட்டது. இவ்விவாதத்தில் இந்தியாவின் தொன்மையான மொழிகளாகிய சமற்கிருதம் அல்லது தமிழ் ஆட்சிமொழியாக இருக்கத் தகுதியுடையது என தீர்மானிக்கப்பட்டது.

    தொடர்விவாதத்தின் போது சமற்கிருதம் தற்போது மக்கள் பயன்படுத்தும் மொழியாக இல்லை அதனால் தமிழே இந்தியாவின் ஆட்சிமொழியாக இருக்கத் தகுதியுடையது என தீர்மானிக்கப்பட்டது.

    இந்த முடிவு தமிழரல்லாத அனைவருக்கும் வயிற்றில் புளியை கரைத்தது... தமிழ்த்தாயின் குழந்தைகளான கன்னடம், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழி பேசும் உறுப்பினர்களுக்கும் மனம் ஒப்பவில்லை... தமிழ் எக்காரணத்தைக்கொண்டும் இந்தியாவின் ஆட்சிமொழியாக அமைந்துவிடக்கூடாது என்பதில் தமிழரல்லாதோர் அனைவரும் தெளிவாகவே இருந்தனர். வழக்கம்போல் தமிழர்களும் தனது அருமையையும் தன் மொழியின் தொன்மை அறிவை உணராமல் தன்சொந்த வேலைகளை மட்டும் பார்த்துக்கொண்டிருந்தனர்.

    இந்த குழப்பத்திலேயே ஆட்சிமொழி என்று இல்லாமல் அலுவல்மொழி என்ற நிலையில் சந்தடிசாக்கில் ”இந்தி” அதிகாரத்திற்கு வந்தது...

    ம்... இப்படி நிகழ்வு நடந்ததாகவே தற்போது தமிழர்களுக்கு நினைவில் இல்லை...

    ReplyDelete
  2. //***
    தெளிவாக பிற மாநிலங்களில் நம் நிலையை எடுத்துச் செல்லாதது எவர் குற்றம்? வங்கமும், வடகிழக்கும்கூட இந்தியை எதிர்க்கின்றன. அவர்களுக்கு இந்த அடைமொழி " வெறியர்கள் " இல்லை. நமக்கு மட்டுமே
    ***//
    நம் அன்றாட வாழ்கையில் திணித்து/திணித்தும் கொண்டிருக்கிறார்கள். நேபாளம், இலங்கை போன்றவை தனிநாடாக இருப்பதால் அவர்கள் தங்கள் மொழியையும், பண்பாட்டையும் பாதுகாக்க முடியும், மேலும் நாணயங்களில் ரூபாய் தாள்களில், அஞ்சலகத் துறையில், பேன் கார்டில், பாஸ்போர்டில், விமானநிலையங்களில்/அறிவிப்புகளில், ஏ டி எம்மில் என எதிலும் அவர்களின் மொழி நிறைந்து இருக்கும்,
    இந்திய அரசு கொண்டு வரும் திட்டங்கள் அத்தனையும் இந்தி பெயர்கள் தாங்கியே வருகின்றன. அவற்றைத் தமிழில் மொழியாக்கம் செய்து செயல்படுத்தினால் நிதி உதவி நிறுத்தப்படும் என்கிறது நடுவண் அரசு.
    தமிழர்களாகிய நமக்கு வரலாற்றில் ஒன்றுகூட எஞ்சியிருக்க போவதில்லை இப்படி ஒருமொழிக்கு முன்னுரிமை அளிப்பதால் பல மாநிலங்களில் பல பிரச்சனை எழுகின்றன எ-டு அசாமில் ஹிந்திக்கு எதிரான கொலைகள், மகாராஷ்டராவில்,கர்நாடகாவில் ஹிந்திக்கு எதிரான வன்முறை ...
    அந்த அந்த மாநிலங்களில் அந்த அந்த மொழியில் ஹிந்தி தலையிடு இல்லாமல் இருப்பதே சிறந்தது ஆகும், மற்ற மாநிலங்களை பற்றி நமக்கு தேவயில்லை, அவர்கள் ஏற்றுகொண்டாலும் கொள்ளாமல் இருப்பதும் அவர்களின் பாடு
    ஆனால் எங்கள் மொழிமீது திணித்து எங்கள் மொழியை அழிக்க வேண்டாம், கோடி பணத்தில் நுறு ரூபாய் எடுத்தால் பெரிய தவறா என்கிறமாதிரி எடுத்தால் கடைசியில் காலனாகூட மிஞ்சாது
    அதுபோலத்தான் மொழியும், எல்லோரும் இந்தி படிக்கனுமா
    ஆனா இந்திகாரனுங்க மட்டும் அவன் தாய்மொழி இந்தி தவிர ஆங்கிலம், பிரஞ்சு, ஜெர்மன்னு படிச்சி நல்லா வளமா வாழுவாரு நாங்க மட்டும் ஒரு பைசாக்கும் உதவாத இந்திய படிச்சி இவன்களுக்கு கொத்அடிமையா இருக்கனும். இந்தியாவில் அனைவரும் ஆங்கிலம் படிக்கிறார்கள் அதையே இனைப்பு மொழியாக வைக்கலாம் அதைவிட்டு-டு
    இந்திய படி, என் தொந்திய புடினா ஒக்காளி அடிதான்

    ReplyDelete
  3. //***

  4. நன்றி தாமிரபரணி ,
    தேசிய மொழி , இந்தி இல்லை என்பதை நமது மாணவ மாணவியராவது அறியவேண்டும். தமிழக பாடத்திட்டத்தில் மொழிவாரி மாநிலங்கள் குறித்தான பாடங்கள் இதைத் தெளிவாக விளக்கவேண்டும்.
    எல்.ஐ.சி, பி.எஸ்.என்.எல்,பொதுத்துறை நிறுவனங்கள் நீங்கள் சொல்வதுபோல் திட்டங்களின் பெயரை மாற்றவியலாது. ஒருங்கிணைந்த ஆட்சிமைக்கு அது குழப்பத்தை ஏற்படுத்தும் -குறிப்பாக கணணி மூலம் தகவல் ஆளுமைக்க்கு இது பெரும் இடராக இருக்கும். ஆயினும், அவர்களது சின்னஙள் பொதுவாக இந்திமொழியின்றி இருக்கலாம். எல்.ஐ.சிக்கு ஏன் "லோகக்ஷேமம் வஹாம்யஹம்" வேண்டும்? தூர்தர்ஷன், எம்டிஎனெல் போன்றவை சின்னஙலை மாற்றலாம். இதற்கு அரசியல் வலு வேண்டும். இருந்தாலும் நமது அரசியல்வாதிகள் செய்யமாட்டார்கள்.
    தமிழகத்தின் இந்தித் திணிப்பு எதிர்ப்பு வாதத்திற்கு இப்ப்பொது போன்று நல்ல வாஇப்பு அமைந்ததில்லை. மும்பையில் இந்திக்காரகளுக்கு எதிர்ப்பு, பெங்களூரில் கனன்றுகொண்டிருக்கும் எதிர்ப்பு, வடகிழக்கு மாநிலன்ங்கள், வங்கம் என ஒரு கூட்டு அமையலாம். பாராளுமன்றம் இப்போது யார் சொன்னாலும் கேட்கும். நிலமை அப்படி.

    ReplyDelete
  5. நன்றி கரிகாலன் அவர்களே,
    நீங்கள் பகிர்ந்துகொண்ட
    இந்த சரித்திரத்தை எங்காவது ஆவணப்படுத்தியுள்ளனரா? ஏன் கேட்கிறேன் என்றால், விக்கிபீடியா போன்ற இணையதளங்களில் இது குறித்து எழுதமுடியும்.. பின்வருவோர்க்கு இந்த தேசிய மொழி குறித்தான பொய்கள் அம்பலமாகும்.

    ReplyDelete
  6. //***
    எல்.ஐ.சி, பி.எஸ்.என்.எல்,பொதுத்துறை நிறுவனங்கள் நீங்கள் சொல்வதுபோல் திட்டங்களின் பெயரை மாற்றவியலாது. ஒருங்கிணைந்த ஆட்சிமைக்கு அது குழப்பத்தை ஏற்படுத்தும்
    ***//
    10 திட்டங்களில் 4 திட்டங்கள் தமிழில் பெயரை வைத்து வரலாமே
    சிங்கப்புர் விமான நிலையங்களில் தமிழ் அறிவிப்புகள் கேட்க முடிகிறது ஆனால் தமிழ் நாட்டில் தமிழ் அறிவிப்புகள் இல்லை நம் மொழியின் உரிமையை விட்டுகொடுக்க நம் மொழி ஒன்றும் இன்று தோன்றிய மொழி அல்ல, இப்படி எல்லா துறையிலும் இந்தியைவிட்டால் ஒருநாள் தமிழ் நிச்சயம் அழியும், அப்ப யோய் நாம் நியாயம் கேட்டால் அன்று ஏன் அனுமதித்தாய்னு நம்மிடமே கேட்ப்பான்,இப்படியே விட்டோம் பிறக்கும் பிள்ளைகளின் உடம்பில்கூட இந்தியால் எழுதிவிடுவான்க, இவங்க இந்தி இந்தினு கத்துனா அது நாட்டுபற்று,மொழிபற்று அதுவே நாம தமிழ் தமிழ்னு நம்ம தமிழ்நாட்டில கத்தினாலே தேசகுற்றம். ஆதலால் இந்த இந்தி வார்தைகள் தமிழ் நாட்டில் புழங்குவதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும், இந்தி எதிப்பு தளம்/இயக்கம் இருந்தால் தயவுசெய்து தெரிவிக்கவும்(நீயே ஒரு தளம் தொடங்க வேண்டியதானே அப்படினு யாராவது கேட்கலாம், நேரம்யின்மையே இதற்கு காரணம், ஒரு நாள் கண்டிப்பாக தொடங்கபடும்)

    ReplyDelete