Saturday, March 19, 2005

பரிசு -ஜெயகாந்தன்

எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கு ஞானபீடப் பரிசு கிடைத்திருப்பது தமிழர்கள் பெருமிதம் கொள்ளவேண்டிய செய்தி. "அகிலனுக்குப் பிறகு யாருமே தகுதியானவர்கள் இல்லையா?" எனப் பொருமிக்கொண்டிருப்பவர்கள் சற்று ஆசுவாசப்படலாம். காலம் தாழ்ந்த மரியாதைதான். ±É¢Ûõ better late than never.
பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும்போது, தூத்துக்குடி பொது நூலகத்தில் கேட்ட புத்தகம் இல்லாமல், வேண்டாவெறுப்பாகப் புரட்டிய ஜெயகாந்தனின் "யுகசந்தி" எனது கண்ணோட்டத்தையே மாற்றியது. எனது கணிப்பில் புரட்சியான சிறுகதைகளில் தமிழைத்திசை திருப்பியதில் ஜெயகாந்தனுக்கு முக்கிய பங்கு உண்டு.
அவரது பல கதைகள் project madurai-ல் படிக்கக் கிடைக்கின்றன. project maduraiக்கு இந்த இணைய தலைமுறை கடமைப்பட்டிருக்கிறது... புரட்சி எழுத்துக்களுக்காக நாம் என்றென்றும் ஜெயகாந்தனுக்குக் கடமைப்பட்டிருப்பதைபோலவே.

1 comment:

  1. சென்ற ஆண்டில் ஞானபீடப்பரிசு பற்றிய கதையாடல் வந்தபோது ஒரு இணையப்பத்திரிகையின் ஆசிரியர்
    ஞானபீடப்பரிசுக்கு யார் மிகப் பொருத்தமான தமிழ் எழுத்தாளராக இருப்பார் என நீங்கள் கருதுகிறீர்கள்?
    என தமிழ் எழுத்தாளர்கள் (தாய்நில/ கடல்கடந்த) அனைவரிடமும் ஒரு கருத்துகணிப்பு நடத்தியது.
    திறமை,எழுத்துப்பரப்பையும், வயசு , அனுபவம் என்பவற்றை வைத்து நான் ஜெயகாந்தனை முதலாவதாகவும்,
    சுந்தரராமசாமியை இரண்டாவதாகவும், இந்திரா பார்த்தசாரதியை மூன்றாவதாகவும் பரிந்துரைத்தேன்.
    இப்போது ஜெயகாந்தனுக்கு ஞானபீடப்பரிசு கிடைத்துள்ளமையிட்டு மகிழ்ச்சி அடைகிறேன்.
    கி.ராஜநாராயணன், கலைஞர், சோகமித்திரன், நீலபத்மனாபன், அசோகமித்திரன், சுஜாதா,
    ஜெயமோகன் ஆதியோரும் கருத்துக்கணிப்பில் அதிக வாக்குகள் பெற்றவர்கள் என்பது மேற்படி ஆசிரியருடன்
    தனிப்பட்ட உரையாடலில்
    கிடைத்த கொசுறுச்செய்தியாகும்.

    ReplyDelete