வலைப்பதிவுகளுக்கு நான் கணனி முன் இருப்பது எனது ஒன்பது வயது மகனை
ஈர்த்திருக்கிறது. தொண தொணவென நச்சரித்து அவனுக்கும் ஒரு வலைத்தளம்
உருவாக்கிக்கொண்டிருக்கிறான்.
http:\\abhijeetthoughts.blogspot.com
சிறுபிள்ளைகள் தங்களுக்குள் எண்ணங்களைப் பரிமாறிக்கொள்வதற்கு வலைப்பதிவு
நல்ல ஊடகமாக இருக்கும் என்ற நம்பிக்கையில் இது அவனது வலைத்தளம்.
தமிழில் இன்னும் எழுதச் சொல்லிக்கொடுக்கவேண்டும்..
அவையத்து முந்தி இருப்பச் செயல்!
ReplyDeleteநன்றி நடராஜன் அவர்களே,
ReplyDeleteவலையத்து முந்தி இருப்பச் செயல் -
என ஆகிவிட்டது இப்போது.:)
காலம் தட்டினாலும் தளைதட்டுமோ குறளில்?!
அன்புடன்
க.சுதாகர்
Sudhakar,
ReplyDeletenalla muyaRchi ! Let me show my daughter.
BTW, pl. see this post on Nammazwar when you have the time.
http://balaji_ammu.blogspot.com/2006/09/ii.html
ஆவிகளே பதிவு எழுதும்போது உங்க பையன் எழுதக் கூடாதா என்ன?
ReplyDeleteநன்றி அமானுஷ்ய ஆவி அவர்களே,
ReplyDeleteநீங்கள் சொல்வது சரிதான். அவன் பிசாசாய்ப் படுத்துவதை எண்ணும்போது புதிதாக ஒன்றும் செய்துவிடவில்லை எனத் தோன்றுகிறது! வலைப்பூக்களில் உங்கள் அடுத்த வாரிசுகளாக குட்டிப்பிசாசுகளின் பதிவுகளை எதிர்பார்க்கலாம்:)
அன்புடன்
க.சுதாகர்
ஐயா,
ReplyDeleteகுழந்தைகளை குட்டிப் பிசாசுகள் என்று சொல்லாதீர்கள். அவர்கள் கள்ளங்கபடமற்ற குணத்தால் கடவுளுக்கு ஒப்பானவர்கள்.
இந்த Word Verification அவசியமா என்று பாருங்கள்!
ReplyDeleteஅடடா, சீரியஸாக எடுத்துவிட்டீர்களே!,
ReplyDeleteகுட்டிப் பிசாசுகள், வால்-கள் என்பதெல்லாம் எனது செல்லமான திட்டுகள் ஐயா. "பயங்கரமான அழகி" என்பார்களே அதுபோல. (வஞ்சப்புகழ்சி அணியா இது? மறந்து போச்சு)
word verification தேவையில்லாமல் சில advertisements comments-ல் வந்து விழுவதால் வைத்தது. இப்போது நின்றிருக்குமென நினைக்கிறேன். எடுத்து விடுகிறேன்.
குறளில் தளை தட்டுவதா? கேட்கக் காதுகள் கடுக்கிறதே.
ReplyDeleteதந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்
என் குரல்
அப்பன் மகற்களிக்கும் ஆஸ்தி வலையத்தில்
பக்கம் மலர்த்த செயல்.
சுதாகர், உங்கள் பதிலை தவறாகப் புரிந்து பதில் எழுதிவிட்டேன் போலிருக்கிறது.
ReplyDelete//காலம் தட்டினாலும் தளைதட்டுமோ குறளில்?!//
காலம்தான் தட்டும்.