( போன பதிவில் மணியன் மற்றும் வாய்ஸ் ஆஃப் விங்க்ஸ் இட்ட பின்னூட்டத்திற்கான விளக்கம். மிக நீண்டதால் தனிப்பதிவாக இட்டிருக்கிறேன்.)
எனது வாதம் லினக்ஸுக்கு எதிர் அல்ல. லினக்ஸ் பயன்படுத்துவதைப் வரவேற்கிறேன். ஆனால் நடைமுறைப்படுத்த கேரளா எடுத்திருக்கும் அரசியல் போக்குதான் என்னால் ஒத்துக்கொள்ள முடியவில்லை.
பள்ளியில்"லினக்ஸ் பயன்படுத்துவோம்" என்பதன் பின்புலம் மைக்ரோஸாஃப்ட் மென்பொருளை பயன்படுத்துவது குறித்தான எதிர்ப்பு என்பதுதான். மாநில அளவில் ஒரு பெரும் மாற்றத்தைக் கொண்டுவருமுன் சரியான முறையில் பரிசீலனைக்கு உட்படுத்தப்படவேண்டும். எந்த pilot project ம் கேரளா நடத்தி அதன் புள்ளிவிவரத்தைக் கொண்டு வந்ததாகத் தெரியவில்லை.
நான் லினக்ஸ் ஆதரவாளன். ஆனால் பள்ளிகளில் கொண்டு வருமுன் அதனை சரிவர நடைமுறைப்படுத்த சில கேள்விகளுக்கு பதில் தேவையாயிருக்கிறது. லினக்ஸுக்கு தற்போது கேரளாவில் பயிற்சி infrastructure இருக்கிறதா?, அரசு இயந்திரம் இதனை சரிவர புழக்கத்தில் கொண்டுவர பயிற்சி அளிக்க எத்தனை வல்லுநர்கள் தேவைப்படுவர்? எத்தனை காலம் ஆகும்? இது குறித்த அச்சுதானந்தன் அரசின் விளக்கம் என்ன?
லினக்ஸ் மென்பொருள் பயன்படுத்துவதோடு, பிரபலமான மென்பொருள்கள் குறித்தான exposure பள்ளிகளில் கொடுக்கவேண்டும். மைக்ரோசாஃப்ட் நாம் வெறுத்தாலும் விருப்பப்பட்டலும் சரி, உலகளவில் பெரும் ஆதிக்கம் கொண்டுள்ளது. இதனைப் படிப்பிக்க மறுப்பது வர்த்தக ரீதியில் ஒரு competitive disadvantage நிலையை கேரளாவில் ஏற்படுத்தும்.
லாபி என்பது மைக்ரோசாஃப்ட்டுக்கு மட்டுமல்ல, லினக்ஸூக்கும் உண்டு! லினக்ஸ் ஆதரளவாளர்கள் பாராட்டியதில் நான் ஆச்சரியப்படவில்லை.
IT Parks & பள்ளிக்கல்வி:
IT Parkகள் அந்தந்த பிராந்தியங்களில் இருப்பவர்களுக்கும் வேலை வாய்ப்புத் தரவேண்டிய தார்மீகப் பொறுப்பில் இருக்கின்றன. ஆனால், IT Park கள் வியாபார ரீதியில் செயல்படவேண்டியவை. இதில் அரசியல் கலப்பது ஆரோக்கியமல்ல. வர்த்தக ரீதியில் செயல்படும் நிறுவனங்கள் குறுகிய மற்றும் நீண்ட காலத் திட்டங்களில் தங்களுக்கு வரவேண்டிய ப்ராஜெக்ட்க்ளின் தேவைகளை ஆராய்ந்து வல்லுநர்களை எடுப்பர். இதில் எத்தனை ப்ரோஜெக்ட்கள் பிரபலமான மென்பொருட்களை ( மைக்ரோசாஃப்ட்/ ஆராகிள்/ ஐ.பி.எம்) சார்ந்து இருக்கின்றன ? லினக்ஸ் ப்ராஜெக்ட்கள் மட்டும் எத்தனை சதவீதம் என்பதை அச்சுதானந்தன் அரசு கணித்துள்ளதா? எந்த அளவில் இது வருங்கால லினக்ஸ் மட்டும் கற்ற கேரள மாணவ /மாணவியருக்கு வேலை வாய்ப்பிற்கு அனுகூலமாக இருக்கும் - என்பது பற்றி விவாதங்கள் நடைபெற்றனவா? முக்கியமாக , அங்கு முதலீடு செய்ய முன்வரும் தொழில் வல்லுநர்கள், கம்பெனிகள் கலந்து ஆலோசிக்கப்பட்டனரா?
கொச்சி இன்னும் பெங்களூர்/ஹைதராபாத்/ சென்னை போல hot location இல்லை. அதன் வியாபார uniqueness இப்போது என்ன? லினக்ஸ் ப்ராஜெக்ட்கள் அதிகம் வந்திருக்குமானால், பெங்களூர், ஹைதராபாத் எப்பவோ அதில் குதித்திருக்கும்.
லினக்ஸ் பயன்படுத்துவது வளர்ந்துவருகிறது. மறுக்கவில்லை. மேலே குறித்த கேள்விகளுக்கு பதில் அது வளரும் வேகமென்ன, எந்த அளவில் வல்லுநர்களின் தேவை இருக்கும் என்னும் ஆய்வில் இருக்கிறது. இந்த ஆய்வுகள் நடத்தினார்களா/ என்ன முடிவு என்பது வெளிவராத நிலையில் , கேரள அரசின் போக்கினை ஒரு அரசியல் சார்ந்த முடிவாகவே எண்ண வாய்ப்பு இருக்கிறது.
பெப்ஸி/ கோக் பூச்சிக்கொல்லி விவகாரம் அமெரிக்க முதலீட்டைப் பாதிக்கிறது என்பதை நானும் ஒத்துக்கொள்ளவில்லை! ஆனால் இங்கு நிலை வேறு. எனது வாடிக்கையாளர்களுக்கு லினக்ஸ் வேண்டுமானால் நான் அதில் மகிழ்ச்சியாகச் செய்யலாம். அவருக்கு மைக்ரோசாஃப்டின் மென்பொருள் அடிப்படையில் வேண்டுமானால் நான் செய்ய முடியாவிட்டால் வேறொருவன் செய்துபோவான். எது தேவையென நான் முடிவு செய்யவேண்டும். அரசு என் கையைக் கட்டிப்போட உரிமையில்லை.
அரசியல் மாணவர்களின் படிப்பில் விளையாடக்கூடாது என்னும் உங்கள் ஆதங்கத்தில் நானும் பங்குக்கொள்கிறேன்.
ReplyDeleteகட்டுரை நன்றாக இருக்கிறது.
நன்றி மஞ்சூர் ராஜா,
ReplyDeleteகல்வியில் சீர்த்திருத்தம் என்பது "எடுத்தோம் கவிழ்த்தோம்" என்பது போல விளையாட்டில்லை. அரசியல்வாதிகள் பொறுப்போடு செயல்படாதது வருந்தத்தக்கது.
அன்புடன்
க.சுதாகர்
சுதாகர், உங்கள் தனிப்பதிவை இன்றுதான் பார்த்தேன். நீங்கள் எழுப்பியிருக்கும் logistics தொடர்பான கேள்விகளுக்கு கேரள அரசின் தகவல்நுட்ப அமைச்சுதான் சரியான பதிலை தரமுடியும் என்றாலும் திறமூல மென்பொருள் இன்று தனியாக நிற்குமளவு வளர்ந்திருக்கிறது. இதன் முக்கிய பங்கே இதன் நிரல்கள் கணினி அறிவு படைத்த எவருமே புரிந்து கொள்ளக் கூடியதும் அதனை மாற்றிக் கொள்ளக் கூடியதும் தான். இதைத் தான் ஆங்கிலத்தில் "Free not as in free lunch but free as in free speech" என்று சொல்கிறோம். பள்ளிகளில் லினக்ஸ் பயில்வதால் பின்னால் மைக்ரோசாஃப்ட் மற்றும் பிற இயங்குபொதிகளை சுலபமாக கையாளலாம். பயனாளர்கள் தளத்திலும் லினக்ஸில் இயங்கும் மென்பொருள்கள் விண்டோஸ்க்கு இணைந்த இடைமுகம் கொண்டவையாகவே இருக்கின்றன. இது நம்நாடு மேடைக்கணினி மென்பொருள்களில் தன்னிறைவு அடைவதற்கு வழி கோலும். இது தொடர்பான மயூரனின் பதிவையும் காணவும்.
ReplyDeleteDear Mr.Manian,
ReplyDeleteThanks for the info and Mayooran's blog ref.
Sorry for the belated reply. I shall write on this a bit later with some more details on statistics. Presently on tour. WIll be back next week .
with regards
K.Sudhakar
மணியன்,
ReplyDeleteதங்கள் கருத்திற்கு நன்றி. லினக்ஸ் வளர்ந்து வருகிறது- நான் உங்கள் கருத்தை ஆமோதிக்கிறேன். எ
ந்த அளவில் வளர்ந்திருக்கிறது ? என்பதில்தான் கேள்வி. எத்தனை ப்ராஜெக்ட்டுகள் தொழிற்பேட்டைக
ளில் லினக்ஸ்-ஸில் மட்டுமே என வந்திருக்கின்றன என்பது லாப நோக்கு மட்டுமல்ல, பொருளாதார ஆ
ரோக்கியத்திற்குமான கேள்வி. இதில் அரசியல் கொள்கைகள் ,பிடிவாதங்கள் கலப்பது சரியல்ல.
நீங்கள் சரியாகச் சொன்னீர்கள் "free"என்பது இலவசம் என்னும் பொருளிலல்ல , சுதந்திரம் என்னும்
பொருளில் கொள்ளவேண்டுமென்று. ஆனால் இங்கு கேரள அரசு எடுத்த முடிவு இலவசம் என்னும்
அடிப்படையில்.
மயூரன் சொன்னது போல மைக்ரோசாஃப்ட் போன்ற proprietary மென்பொருட்களுக்காக இங்கு
காடிபிடிக்கவில்லை. கண்மூடித்தனமாக ஆதரிப்பதும் எதிர்ப்பதும் ஒரே வகையான அறிவீனம்தான். என
க்கு லினக்ஸ் தெரியும் என்பதால் வாடிக்கையாளர் என்னிடம் வருவார் என எதிர்பார்க்க முடியாது. நான்
இல்லையென்று மறுத்தால், வேறொருவர் தயாராக இருப்பார்- பெங்களூரில், மணிலாவில், ருமேனியா
வில்... சந்தையின் விசைக்குத்தான் நாம் செல்ல முடியுமே தவிர சந்தையை நான் திருப்புகிறேன் என
சவால் விடுவது சரியாகாது. எப்போது சந்தையின் காற்று லினக்ஸ் பக்கம் பலமாக வீசும் என கணிக்கி
றோமோ, அதற்கு ஆயத்தமாக இருக்கமுடியுமே தவிர, நான் தயார் என்பதால் சந்தை என்னிடம் தி
ரும்பாது. இதில் நான் மயூரன் கருத்தில் வேறுபடுகிறேன்.
பள்ளிகளில் சுதந்திரமாக திறந்தமூலப்பொருட்களை மாற்றியமைக்க முடியும் என்று நான் எண்ணவில்லை.
இன்னும் கல்லூரிகளில் தகுதியான VB,ஜாவா, c, c++ ஆசிரியர்கள் கிடைப்பதில்லை. இது மும்பையி
லயே காணலாம். Visiting lecturers கொண்டு சமாளிக்கிறார்கள். எனது மனைவி இக்கணனித்துறை
முதுகலை ஆசிரியர் என்பதால் பல கல்லூரிகள் படும்பாடு நான் அறிவேன். இங்கேயே இந்த நிலை எ
ன்றால், பள்ளிகளில்... அதுவும் கேரள கிராமங்களில்.. லினக்ஸ் தகுந்த பயிற்சியோடு ஆசிரியர்கள் இன்று
கிடைக்கிறார்களா? யார் பொறுப்பேற்பது?
ஒரு செய்தி... கேரளாவில் இப்போது மைக்ரோசாஃப்ட் மற்றும் பிற பிரபலமான மென்பொருள் கற்றுத்
தருவதற்காக தனியார் கல்வியமைப்புகள் தலைப்பட்டுள்ளன. இது தனியார் கல்விக்கூடங்களுக்கு நல்ல
லாபம் தருமே தவிர, பாதிப்பு மாணவர்களுக்கும் , பெற்றோர்களுக்கும்தான்.
முதலில் ஆசிரியர் குழுக்களைத் தயார்படுத்த வேண்டும். இது குறித்து 2003ல் கேரளாவில் லினக்ஸ் பயி
ற்சி குறித்தான கருத்தரங்கு ஒன்று பூனே லினக்ஸ் குழுவால் நடத்தப்பட்டது. அதன் முடிவுகள், அதனை
க்குறித்து அரசு எடுத்த திட்டங்கள் , செயலாக்கங்கள் குறித்து ஒரு செய்தியும் இல்லை. செய்திக்கான
உரிமை குறித்து இத்தனை பேசும் நம்மக்கள் இதனைக்குறித்து ஒன்றும் பேசாதது வியப்பைத் தருகிறது.
ஒரு அரசு, தன் கட்சிக் கொள்கையின் அடிப்படையில் மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடுகி
றது... அதனை திறந்த மூலப்பொருள் ஆதரவு என்றபெயரில் உலா நடத்துகிறார்கள்... இதன் அரசியல்
பின்னணி அறிந்தும் வாய் மூடி நிற்பவர்களைத்தான் சொல்லவேண்டும்.
அன்புடன்
க.சுதாகர்.