Thursday, April 21, 2005

தமிழ் நாடகங்கள் (தொடர்ச்சி)

ஊக்கப்படுத்திய நண்பர்கள அனைவருக்கும் நன்றிகள். மக்களிடம் ரசனை குறைந்து விட்டது எனச்சொல்லவில்லை. எதுநாடகம்எதுதிரைக்கதையின்அரங்கச் செயலாக்கம்
என்பதில் உள்ள மனப்பிறழ்வே நமது நாடகங்களின் இந்நிலைக்குக்காரணம் எனவே சொல்லியிருக்கிறேன்.
ரசனை என்பது தனிமனித தளத்தைச் சேர்ந்தது.
பாய்ஸ் கம்பனியின் நாடக நடிகர்கள் திரையுலகில் எவ்வாறு பரிமளித்தனர் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. அன்று திரையுலகு நாடக வசனங்களையும், காட்சியமைப்பையும் பெரிதும் உள்வாங்கியது. இன்று நாடகத்தில் நாம் திரையுலக சிரிப்புக் காட்சி அங்கங்களையும், வெள்ளித்திரையின் காட்சியமைப்பு தாக்கங்களையும் எதிர்பார்க்கிறோம். நாடகம், முப்பரிமாணத்தில் நடிக்கப்படும் சினிமா அல்ல என்பது நம் மக்கள் உணரவேண்டும். அதன் வீச்சு அலாதியானது.

கதகளிக்கும், யக்ஷகானத்திற்கும் கிடைக்கும் மரியாதையும் தனி அந்தஸ்தும் தமிழ்நாடக வடிவங்களுக்குக்கிடைப்பதில்லை. பெரும்பாலானோர்க்கு எது நமது மரபுக்கலை என்பதும் தெரியாது. மரபுக்கலைக்கும் நாடகத்ற்கும்தொடர்பு
இருப்பினும் இரண்டும் வேவேறு தளங்களைச் சேர்ந்தவை.

நாடகங்களின் தொய்விற்கு பொருளாதாரம் ஒரு காரணமாக இருக்குமென நான் நம்பவில்லை.நாடகக் குழுக்கள் தங்களது அடிப்படைத் தேவைகளைத் தீர்த்துக்கொள்ள, அனுமதிச்சீட்டின் விலையை நம்பியிருக்கின்றன.
சினிமா போல ஒரே நேரத்தில் பல இடங்களில் ஒரு நாடகக் குழு நடத்த முடியாது.எனவே அவற்றின் வருமானத்திற்கும், பார்வையாளர்களின் எண்ணிக்கைக்கும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு எல்லை இருக்கிறது. டி வி டி கலாச்சாரம் நாடகத்தில் எடுபடாதது. நரைன் சொன்னது போல
ஒரு சீசன் முயற்சி செய்துபார்க்கலாம்.

மும்பையில் என் சி பி ஏ என்னும் அரங்கு, வருடம் தோறும் பன்னாட்டு நாடகங்களை செயலாக்கச் செய்கிறது. இதே போல ப்ருத்வி தியேட்டர் ( ப்ருத்வி ராஜ் கபூர் நினைவாக) பன்னாட்டு நாடக வாரம் கொண்டு வருகிறது மும்பையில், வருடம் தோறும். நம்நாட்டின் சிறுவர் நாடக முயற்சிகளும் இங்கு ஊக்கப்படுத்தப்படுகின்றன. கேரளாவிலிருந்து பல குழுக்கள் இதனை நல்ல மேடையாக பயன்படுத்தியிருக்கின்றன. .இது போல ஒரு வலுவான அமைப்பு தமிழ் நாட்டில் இருக்கிறதா என்பது முக்கியமான கேள்வி.

4 comments:

  1. சுதாகர், முதலில் நாடகங்கள் பற்றி பேசுவதற்கு பாராட்டுகள். ஆனால், நிதர்சனத்தில் என்ன நடக்கிறது. பாம்பே சாணக்யா குழுவின் மிக முக்கியமான அங்கத்தினரான பாம்பே ஞானம், இங்கே டிவி சீரியல்களில் செட்டிலாகிவிட்டார். நான் படிக்கிற காலத்தில் நாடகங்களில் கோலோச்சிய எல்லோரும் - பீலி சிவம், பிரபு, சுமதிஸ்ரீ, ஆனந்தி, மேனெஜர் சீனா, கண்ணன், கோபி - எல்லோரும் இன்றைக்கு சீரியல்களில் இருக்கிறார்கள். வரவேற்பு கம்மி. இதையும் தாண்டி, பூவிலங்கு மோகன் போன்ற ஆட்கள் பிடிவாதமாக இன்னமும் நாடகங்கள் நடத்த இருக்கிறார்கள். யோசித்துப் பாருங்கள், தேர்ந்தெடுத்த சுஜாதாவின் கதைகளை பூர்ணம் விஸ்வநாதன் நாடகமாக போட்டார். இப்போது அந்த நம்பிக்கையும், வணிக தெம்பும் யாரிடத்திலிருக்கிறது ?

    //மும்பையில். ப்ருத்வி தியேட்டர்் பன்னாட்டு நாடக வாரம் கொண்டு வருகிறது மும்பையில்.இது போல ஒரு வலுவான அமைப்பு தமிழ் நாட்டில் இருக்கிறதா என்பது முக்கியமான கேள்வி.//

    மேஜிக் லாண்டர்ன் அதுப் போல ஒரு முயற்சியினை செய்து வருகிறது. இது தாண்டி, வசன நாடகம் என்கிற வகையை தாண்டி, பரிசோதனை முயற்சிகள் மூலமும், நடனம், இசை, நடிப்பு, ஓலி இவற்றை அடிப்படையாக கொண்டு புதுவிதமான அரங்கேற்றங்களையும் அனிதா ரத்னமின் "அரங்கம்" அமைப்பு செய்து வருகிறது. கூத்துப் பட்டறை கொஞ்ச நாட்களாக அமைதியாக இருக்கிறது. ஞானியின் "பரீக் ஷா" குழுவும் இதுப் போல முயற்சிகளை செய்து கொண்டுதானிருக்கிறது. ஆனால், ப்ருத்வி தியேட்டர் அளவிற்கு இல்லை என்பதுதான் உண்மை.

    ReplyDelete
  2. நரேன், தாங்கள் சொன்னது முற்றிலும் உண்மை. நாடக நடிகர்கள் சீரியலுக்கு வந்தது பொருளாதார நிலை ஒரு காரணமெனில், அந்த தொய்வு வந்தநிலை எங்கே? எப்படி கேரளாவிலும்,மஹாராஷ்ட்டிராவிலும், குஜராத்திலும் சினிமா நடிகர்கள் இன்னும் நாடகங்களில் நடித்துவருகின்றனர்? மக்களின் ஆதரவு நாடகங்களுக்கு முக்கியத் தேவை. குப்பையான நாடகங்களுக்கும், இரட்டை அர்த்த வசனங்களுக்கும் பலத்த ஆராவரம் மராத்தி நாடகங்களிலும் இருக்கின்றன. ஆயின் அதன் நடுவே நல்ல நாடகங்கள் ( காராசாரமாகப் பேசப்பட்ட காந்தி vs காந்தி , last train to borivali)வரத்தான் செய்கின்றன. இளைஞர்கள் நாடகம் பார்ப்பதெற்கெனப் போகிறார்கள். ( இது நான் அறிந்த உண்மை). நல்ல நடிகர்கள் வெதும்பி சீரியலுக்கு ஒதுங்கியதற்கு நாடகத்தின் மூலப் பண்பில் காரணம் இருக்கிறது. நாடகத்திற்கு அவையினரின் பங்களிப்பு தேவை. It is not only an interactive activity.. more than that, it is co-creative activity( ஆங்கிலத்தில் எழுதியதற்கு மன்னிக்கவும்.சரளமாக இப்பதங்களுக்கு ஏற்ற தமிழ்ப்பதம் கிடைக்கவில்லை). நரேன், மக்கள் கொஞ்சம் paradigm shift செய்துகொண்டால் நாடகம் மீண்டும் உயிர்பெறும். நாற்பது வருடங்களாக பேசப்பட்டும் போற்றப்பட்டும் வரும் முத்துசாமியின் "நாற்காலிக் காரரின் கதை" எத்தனை முறை பார்க்கப்ப்ட்டு மக்களால் பேசப்படுகிறது? தெருக்கூத்து, பரீக்ஷா, மாஜிக் லேன்Tடரன் போன்ற அமைப்புகளின் பெயர் நம் மக்களில் பலருக்கும் தெரிவதில்லை என்பது வருந்துதற்குரியதே. முயற்சி எடுக்கவேண்டிய பொறுப்பு மக்களிடம் பெரிது என்பது என் எண்ணம்.

    ReplyDelete
  3. சுதாகர் தங்கள் பதிவை இன்றுதான் பார்த்தேன். மிகவும் சந்தோஷமாக இருந்தது. கனேடியச் சு10ழலில் தமிழ் சீரிய நாடகங்களுக்கு (புலம்பெயர்ந்த நாடுகளில்) நல்ல மதிப்பு இருக்கின்றது. நானும் கடந்த 5வருடங்களாக நடித்து வருகின்றேன். ஒரு வருடத்தில் இரண்டு மூன்று முறை மேடையேறியும் இருக்கின்றேன். மொழிபெயர்ப்பு நாடகங்களும் நடித்திருக்கின்றேன். பல ஆங்கில மேடை நாடகங்களையும் பார்த்து வருகின்றேன். முருகபூபதியிடம் போய் பட்டறையில் பயிற்சி பெற ஆசை முடிந்தால் போகவும் உள்ளேன். 2006ம் ஆண்டு மூன்று பெண்ணியக் கருத்துக்களைக் கொண்ட நாடகங்களை மேடை ஏற்றவும் உள்ளேன். சீரிய நாடகங்கள் ஒரு பக்கமாக வளர்ந்து வருகின்றன. அதே நேரம் ஜனரஞ்சர நாடகங்களும் வாரா வாரம் மேடை ஏறிக்கொண்டுதான் இருக்கின்றன. இந்தியாவில் மேடையேறும் சீரிய நாடகங்கள் பற்றி விமர்சனங்களைப் படங்களுடன் முடிந்தால் தாருங்கள். உதவியாக இருக்கும். தகவலுக்கு மீண்டும் நன்றி.

    ReplyDelete
  4. அன்பின் கறுப்பி அவர்களே
    தாங்களும் இங்கு பின்னூட்டம் அளித்ததில் மகிழ்ச்சி. நன்றி. நாடகம் குறித்து எனக்குத் தெரிந்த அளவில் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள முயன்றிருக்கிறேன். ஒரு பார்வையாளன் என்ற முறையில் எனது கருத்துக்களைச் சொல்லியிருக்கிறேன். மற்றபடி, எனக்கு நாடகத்துறையில் அனுபவம் கிடையாது. மும்பையில் நடக்கும் நாடக முயற்சிகளைக் குறித்து அவசியம் எழுதுகிறேý.

    ReplyDelete