Sunday, October 23, 2005

மற்றொரு இழப்பும், அது குறித்த அறியாமையும்

மற்றொரு இழப்பும், அது குறித்த அறியாமையும்

சு.ரா மறைந்தது குறித்து சிலர் எழுதினர். அவரது படைப்புகளை எவ்வளவு தூரம் தமிழக சராசர வாசகன் அறிந்திருக்கக் கூடுமென்பது அனைவருக்கும் தெரிந்த புள்ளியியல் விவரம்.
தமிழகம், இழப்புகளைக் குறித்து அறியவேண்டுமெனில், இருப்பைக் குறித்து முதலில் அறிந்திருக்கவேண்டும். நாடக மேதை ஹெக்கோடு சுப்பண்ணா மறைந்தார் என்றால் பெரும்பாலோருக்குத் தெரியாது. வருந்தத்தக்க , வெட்கக்கேடான அறியாமை.
மேலும் இது குறித்து நான் எழுதாமல், வெங்கட் சாமிநாதனின் அமுதசுரபியில் வெளியான இக்கட்டுரையைப் படித்துப் பாருங்கள் என்பதோடு நிறுத்திக்கொள்கிறேன்.

4 comments:

  1. Anonymous3:54 AM

    Thangalathu Aathangam Niyaayamaanathe! Izappaik kuritthu varunrhummun Iruppaik kuritthu therinthirukka vaevdiyathu Avasiyam Athe naeratthil Iranthap Piraku Avarkalukku Anchali selutthuvathi kattum AArvatthai Anthap Padaippaali Irukkumpothu Avarukkaana Uthavikalai seyvathil Kattiyirukkalaam!

    ReplyDelete
  2. அன்புள்ள சுதாகர், ஹெக்கோடு சுப்பண்ணாவினைப் பற்றிய என்னுடைய பதிவு - http://urpudathathu.blogspot.com/2005/09/1932-2005.html இது் திண்ணையில் வெங்கட் சுவாமிநாதன் எழுதியதிலிருந்தும், தீம்தரிகிடவில் ஞாநி எழுதியதையும் அடிப்படையாக வைத்து எழுதியது. சு.ராவின் இழப்பினை சில பேர்கள் தமிழிலக்கியத்தின் இழப்பாக சொல்லுவதில் எனக்கு உவப்பில்லை. அடுத்த மாத காலச்சுவடு சு.ரா புகழ் பாடும். ஆனால், ஹெக்கோடு சுப்பண்ணா தெரியாது. கத்தாரின் பாடல்கள் தெரியாது. நீங்கள் ஏன் மராட்டி நாடக உலகம் பற்றியும், இலக்கியவாதிகள் பற்றியும் ஒரு தொடர் எழுதக் கூடாது ?

    ReplyDelete
  3. //நீங்கள் ஏன் மராட்டி நாடக உலகம் பற்றியும், இலக்கியவாதிகள் பற்றியும் ஒரு தொடர் எழுதக் கூடாது ?//

    நானும் கேட்கிறேன் சுதாகர். எழுதுங்கள்!

    -மதி

    ReplyDelete
  4. ஹமீத்,
    தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றிகள். இழப்பு ஹெக்கோடு சுப்பண்ணாவிற்கல்ல; கொடையும், பரிசுகளும் அவரைத் தேடிவந்தன. அவை வராதபோது அவர் துவண்டுவிடவுமில்லை. தன் பணியைச் செவ்வெனே ஆற்றியிருந்தார். இவரைப்பற்றி இவ்வளவு காலம் தமிழ் உலகம் அறிந்திராதது மட்டுமல்ல, எங்கும் பேசவும் இல்லை. அறியாமை, அலட்சியம், இரண்டாம்தர கலைப்படைப்புகள் மீது நாம் கொண்ட அபரிமித ஆர்வம்- இவை கலைஉணர்வை ஒடுக்கிவிடும். ஒரு தலைமுறையே , நல்ல நாடகம், சினிமா எதுவென உணராது மங்கிப்போகும். இது ஆபத்தானது.

    நாராயணன்,
    உங்களது பதிவை இப்போதுதான் பார்த்தேன். ஹெக்கோடு சுப்பண்ணாவின் நாடக, திரைப்பட ரசிப்புத்தன்மை வளர்ப்பு குறித்த மற்றொரு சுட்டி இது.
    http://indianwriting.blogspot.com/2005/07/heggodu-ninasam-malnad-all-without.html
    சு.ரா-வையும் நமது சராசரி வாசகர்கள் அறியவில்லை. ஹெக்கோடு போன்றவர்களின் நாடக , கலை வளர்ப்பில் பங்கு குறித்தும் அறிவதில்லை என்பது எனது ஆதங்கம்.
    பொதுவாகவே, நமது ஜனரஞ்சகமான பத்திரிகைகள் பல பரிமாணங்கள் கொண்ட செய்திகளைத் தாங்கி வருவதில்லை.

    மதி,
    தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி. மராட்டிய இலக்கியம் பற்றிப் பேசலாம். அதற்கு எனக்கு இன்னும் பல நூல்கள் படிக்கவேண்டும். இன்னும் அரிச்சுவடியில் இருக்கிறேன்.
    என்.சி.பி.ஏ , மும்பையில் இப்போது நாடக விழா ஒன்று நடத்தப்போகிறது. அதன் அனுபவம் குறித்து எழுதலாமென இருக்கிறேன்.
    அன்புடன்
    க.சுதாகர்

    ReplyDelete