Tuesday, April 19, 2005

¾Á¢Æ¢ø ¿¡¼í¸û Tamil Theater

தமிழில் நாடகங்கள்

நவீன நாடங்கள் என்றாலே நம்மிடையே பொதுவான ஒரு கருத்து நிலவுகிறது. அது என்னமோ அறிவு ஜீவிகளுக்காக ( அல்லது அவ்வாறு நடந்துகொள்பவர்களுக்காக), அல்லது ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் இருக்கும் மக்களுக்காகவே ,அம்மக்களால் இயற்றப்படும் நாடகங்கள் என. கொஞ்சம் உற்றுப் பார்த்தால் தெரிகிறது - அவை அப்படியில்லை.

நாடகமென்பது இப்போது திடீர் நகைச்சுவை வசனங்களும், மேடையில் திரைப்படக் கதைத் துணுக்குபோல ஒன்றை நடித்துக் காட்டும் காட்சியமைப்புகளுமாக மட்டுமே என நமது எண்ணம் சுருங்கிவிட்டது. இதில் திரைப்படத்தின் ஆதிக்கம் இருக்கிறது என்று வெறுமே குற்றப்படுத்துவது மட்டும் போதாது. மக்களிடம் "எது நாடகம், எது திரைப்படம்" என்னும் பிரித்தறியும் ஆற்றல் குறைந்துவிட்டது. ஏதோ பார்த்தோம் வந்தோம் என்பது மட்டுமல்ல நாடகம்.
பார்ப்பவரின் பங்களிப்பு நாடகத்தின் இயல்பில் முக்கியமான ஒன்று. ஆரோக்கியமான நாடக நிகழ்வு, அவையினரின் பங்களிப்பில் பரிணமிக்கிறது என்கின்றனர் நாடக மேதைகள். தொலைக்காட்சியிலும், திரைப்படத்திலும் அவையினரின் பங்கு பார்ப்பதில் மட்டுமே. நாடகத்தை இவ்வாறு பார்க்க நினைப்பது தவறெனவே நினைக்கிறேன். இதுவே அடிப்படையில் தமிழ் நாடகத்தின் தொய்வுநிலைக்கு காரணமாகவும் இருக்கலாம்.

நவீன நாடகங்கள் நம்மை பன்னாட்டு சமுதாயத்தில் பிணைக்கின்றன. தமிழ் நாடகம் என்பதை விட தமிழில் நாடகம் என்பது மேலும் ஆரோக்கியமான சமுதாயத்தின் அடையாளம். தமிழில் நல்ல நாடகங்கள் இருக்கின்றன. ஆயின், நவீன நாடகத்தில், ப்ரெஞ்சு, ஜெர்மனி, இத்தாலி, அமெரிக்கா போன்றவர்களின் நாடகப் பாங்குகள் நம்மில் வந்தடைவதை நாம் ஏன் அறியாமல் தள்ளுகிறோம்? "போப்பா. எவனுக்கு இந்த அளவு நேரமிருக்கு?" என்பது ரசனைக்குறைவு என்பதாக மட்டும் ஆகாது... ஒரு மனித வளர்ச்சியின் சீரழிவு எனவே கொள்ளவேண்டும்.

திரு. அண்ணாமலை அவர்கள்(பி.பி.சி சென்னை) தினமணியில் 25.3.2005 அன்று எழுதிய கட்டுரையை வாசிக்கக் கிடைத்தது. இருவது வருடங்களாக ஈழத்தமிழர்கள் அனுபவித்து வரும் கொடுமைகளை எவ்வாறு அவர்கள் அடைக்கலம் புகுந்த சுவிட்சர்லாந்து மக்கள் நாடகமெனும் ஊடகம் மூலம் அறிந்துகொள்கின்றனர் என்பதை விவரித்திருக்கிறார். இது ஒன்று போதும் "நாடகம் , பிற ஊடங்களைவிட எவ்வாறு மனிதன் ,மற்றொரு மனிதனைப் புரிந்துகொள்ள உதவுகிறது" என்பதைக் காட்டுவதற்ற்கு.ஒரு interactive media ஆக இருப்பதால், நாடகம் மனிதனை மனித நேயத்தின் அருகிலேயே வைக்கிறது.
தினமணி கட்டுரையினைக்கீழ்க்கண்ட சுட்டியில் காணலாம். எழுத்துரு தேவைப்படின்,தினமணி தளத்திலிருந்து இறக்கிக் கொள்ளுங்கள்.
http://www.dinamani.com/news.asp?ID=DNE20050325104518&lTitle=R%FBXVeLm&Title=Editorial+Page

6 comments:

  1. Sudhakar,

    Thanks for your post!

    could you please activate the 'email to a friend' facility in your dashboard?

    nandri Suthakar for your post.

    -Mathy

    ReplyDelete
  2. Anonymous4:41 PM

    யாராவது எழுத மாட்டாங்களா-ன்னு நினைச்ச சங்கதி இது. நன்றிகள் நண்பரே!.

    ReplyDelete
  3. அவ்வப்போது கறுப்பியின் பதிவுகள் தவிர, நாடகம் குறித்து எந்தத் தமிழ் வலைப்பதிவையும் படித்ததாக நினைவில்லை. சினிமாவுக்குக்கூட 'வசனப் புத்தகங்கள்' விற்கப்பட்ட காலங்கள் இருக்கவில்லையா? ;-) (சினிமாவை அந்தவகையில் நாடகம் கிட்டத்தட்ட 30-40 வருடங்கள் தொடர்ச்சியாகப் பழிதீர்த்தது என்பார்கள்). தமிழில் 'நாடக வெளி' இதழ் வந்துகொண்டிருந்தது... கிடைத்தால் படித்துப் பார்க்கவும்.

    ReplyDelete
  4. நல்ல பதிவு. நாடகங்கள் என்பது ஒரு பக்கம். ஆனால், தமிழகத்தின் நிறைய மரபுக்கலைகள் நீங்கள் சொல்லும் பார்வையாளனோடு இடையூடாடும் (interactive) கலைகள் தான். நாடகங்கள் சரிந்ததற்கு 1. சினிமா மிக முக்கியமான காரணம். 2. மக்களின் ரசனைக்கேற்வாறு நம்மால் பல்வேறுவிதமாய் நாடகங்கள் தர இயலவில்லை. 3. தொலைக் காட்சி சீரியல்கள் நம் மக்களின் மொத்தமாய் முழுங்கி விடுகின்றன. அந்த நேரத்தினைப் பெற இப்போது சினிமா டிவியோடு மல்லுக்கு நிற்கிறது. சென்னையில் இன்று நவீன நாடகங்கள் தவிர, நாடகம் போடவேண்டுமென்றால், சில அமெச்சூர் குழுக்களும், கிரேசி மோகன், எஸ்.வி. சேகர் போன்றவர்களால் தான் முடிகிறது. மேலும் டிக்கெட் விலைகள் அதிகம். டோனர் பாஸ் என்றழைக்கப்படும் முன்வரிசை டிக்கெட்டுகள் 250 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஆர்வமுள்ள ஒருவன் எவ்வாறு அவ்வளவு காசு கொடுத்து நாடகம் பார்ப்பான்? அதற்கு 50 ரூபாய் கொடுத்தால், டிவிடியில் ஆங்கில ஆக்ஷ்ன் படம் பார்த்துவிட்டு போய்விடலாம். இதுதான் இன்றைய சிக்கல். மக்களை குறை சொல்லுவதில் பயனில்லை. ரசனைக் குறைவு என்பதை ஒத்துக் கொள்ளமாட்டேன். கொடுக்கிற விதத்தில் கொடுத்தால், மக்கள் எதையும் ரசிப்பார்கள். மாற்றாக, நாடக கலைஞர்கள் கூடி, டிசம்பர் எவ்வாறு சங்கீதத்திற்கென்று சென்னையில் ஒதுக்கப்பட்டிருக்கிறதோ, அதேப் போல ஒரு மாதத்தையோ, வாரத்தையோ தேர்வு செய்து தொடர்ச்சியாக நாடகங்களையும், அதைப்பற்றிய செய்திகளையும் பரப்பி, மக்களை பார்க்க தூண்ட வேண்டும். மக்களை குறைசொல்லுவதில் பயனில்லை என்பதுதான் என் தாழ்மையான கருத்து. லேகியம் விற்பவன் கூட வாங்காவிட்டாலும், குறைந்தது 50-100 பேர்களை வேடிக்கைப் பார்க்க வைக்கிறான். அப்படியிருக்கையில், நாடகம் போடுகிறவர்களும், சில பல யுக்திகளை பயன்படுத்தி, பார்வையாளனை அரங்குக்கு அழைக்கவேண்டும்.

    ReplyDelete
  5. பதிவுக்கு நன்றி.

    இந்தியாவில் நாடகம் இன்னபிற கலைகளுடன் சேர்ந்து அழிந்து வருவது வருத்தப்படத்தான் வைக்கிறது. எங்கள் கிராமத்தில் கூட வருடாவருடம் பங்குனிப்பொங்கலின் போது நடந்து வந்த பக்தி நாடங்களில் இருந்து சமூக நாடங்கள் என்று மாறி இப்போது அதுகூட இல்லை. இன்னிசைக்கச்சேரி போன்றவை வந்துவிட்டது.

    ஆனால் இங்கு சிங்கை அரசின் தேசிய கலைகள் மன்றம் - நாடகக் கலைக்கு ஆதரவு தருகிறது. தமிழில் குறிப்பாக "ரவீந்திரா நாடகக் குழு" பெரும்பாலும் படித்த/படித்துக்கொண்டிருக்கும் இளையர்கள் தொடர்ந்து நாடகம் நடத்திக்கொண்டு வருகின்றனர். பரவலாக இல்லையென்றாலும், சிறப்பாகத்தான் இருக்கிறது.

    மீண்டும் நன்றி.

    ReplyDelete