Saturday, September 10, 2005

மெல்லத் தமிழினி.....

போன வாரம் சென்னைக்கும் பாண்டிச்சேரிக்குமாய் ஒரு அவசரப் பயணம். சென்னைஎக்ஸ்பிரஸ் சென்ட்Tரலில் வந்து சேர்ந்த்ததுமே ஒரு புதிய உற்சாகம். குப்பையாக மும்பை சாலைகளைக் கண்டு வெறுத்துப் போயிருந்த எனக்கு சென்னை என்றாலே கொஞ்சம் நிம்மதிதான்.
மவுன்ட் ரோட்டில் ஒரு பெரிய விளம்பரப்பலகை. "செல்ஃபோன் எதுக்கு. டாக் பண்ண்றதுக்கு" என ஒரு நடிகை சொல்லியவாறு ... தமிழ் வாசிக்கத் தெரியாத என் மகனுக்கு அதனை வாசித்துக்க் கட்டுவதில் சிரமமே இருக்கவில்லை. " அப்பா, இது இங்க்லீஷ்ல இருக்கு. நீ தமிழ்ல என்ன எழுதியிருக்குன்னு சொல்லு" என்றான். ஒரு வருடம் முன்னால் புனே நகரில் தேசிய வேதியியல் ஆராய்வுச் சாலையில் நடந்த ஒரு நிகழ்வு நினைவுக்கு வந்தது.
எனது நண்பர் டாக்டர் தேஷ்பான்டேயின் மகன் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் வேலைகிடைத்து சென்னை செல்ல நேர்ந்தது. " அவனுக்கு தமிழ் தெரியாதே" என்றார் கவலையாய். " ஒன்றும் பயமில்லை சார். ஒரு மாதத்தில் தேறிவிடுவான். மேலும் அலுவலகத்தில் ஆங்கிலம் இருக்கும். கவலையை விடுங்கள் " என்று சொல்லியிருந்தேன். இரு வாரங்களுக்கு முன் அவரது வீட்டில் அவர் பையனைச் சந்தித்தபோது " மொழிப் பிரச்சனை இருக்கா?" என்றேன். இல்லை என்றான் சிரித்தபடி. " அவங்க தமிழ்-ல பேசினாலும் எனக்குப் புரியும். பாதிக்கு மேல தமிழ்ல இங்லீஷ்தானே இருக்கு ? "
தமிழ் இலக்கணம், இலக்கியம் தெரியாது எனக் கவலைப்படுவதை விட இது மிகத் தீவிரமாக கவனிக்கப் பட வேண்டிய விசயம். சராசரி மனிதன் பேசும் தமிழில் தமிழ் எத்தனை சதவீதம் இருக்கிறது? ஆங்கிலம் கலக்காது பேசுவது "செந்தமிழில் பேசுவது" என்று அர்த்தமில்லை.
எளிய தமிழில் கடு கட்டியான செந்தமிழ் வாக்குகள் இல்லாமலே சரளமாக பேசலாம். இந்த மொழிப்பூனைகளுக்கு மணிகட்டுவது நம்மால் மட்டுமே முடியும்.
அரசியல்வாதிகள் ஒன்றும் செய்யமாட்டர்கள். அவர்கள் அளவில் மொழிப்பற்று என்பது நெடுஞ்சாலையிலும், ரயில்வண்டி நிலயங்களிலும் இந்தி மொழிப் பெயர்களை தார் போட்டு அழிப்பது என்ற அளவோடு நின்றுவிடுகிறது.
நாம் ஒழுங்கான தமிழில் வீட்டிலும் வெளியிலும் பேசவில்லையெனில் 'மெல்லத் தமிழினி..."

பி.கு அதே தொலைபேசி நிறுவனத்தின் விளம்பரம் மும்பையில் எப்படி தெரியுமா? சரியான இந்திச் சொற்களை ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறார்கள்.!

4 comments:

 1. நீங்கள் சொல்வது சரிதான் சுதாகர், தனியார் தொலைக்காட்சி சானல்கள் வந்தபிறகு ஆங்கிலம் கலந்த தமிழ் பிரபலமாயிருக்கென்று நான் நினைக்கிறேன், இதுமாதிரி பேசுவது ஸ்டைலாகி விட்டது.. அது சரி சார், மும்பையில் எங்கிருக்கீங்க, வாஷி பக்கம் வந்தா என்னைப் பார்க்கலாம்..
  மும்பை மழையை பத்தி நான் கூட கொஞ்சம் கிறுக்கியிருக்கேன்..நேரமிருக்கும் போது பாருங்க...

  ReplyDelete
 2. Anonymous6:17 AM

  //தமிழ் வாசிக்கத் தெரியாத என் மகனுக்கு// எங்கேயோ உதைக்குதே

  ReplyDelete
 3. சோ.பை அவர்களே,
  பின்னூட்டத்திற்கு நன்றி. கோரேகாவ் ல இருக்கேன். நாம் சந்தித்துப் பேசுவோம். உங்களது பதிவைப் பார்த்துவிட்டு சொல்கிறேன்.

  அனானிமஸ்,
  என் பையனுக்கு எட்டரை வயசுங்க!.அரிச்சுவடி ஆரம்பிச்சிருக்கோம். டாட்டா டெலிகாம் விளம்பரம் புரியலைன்னா ஒண்ணும் குடிமுழுகிப் போயிடலைந்னு சொன்னா கேக்கிறானா? த்ரிஷா போட்டாவைப் பெரிசாப் போட்டிருக்கான்களேன்னு நான் பார்த்தது (?!) தப்பாப் போச்சு சாமி.

  ReplyDelete
 4. எட்டரை வயசுக்கு அரிச்சுவடியா ? மும்பையில் இருப்பதால் ஒத்துக் கொள்ளலாம். 12 ல பொன்னியின் செல்வன் படிக்கிற மாதிரி கொண்டு வாங்க சார். வாழ்த்துக்கள்.

  ReplyDelete