Saturday, September 10, 2005


பாரதி ஸாங்க்ஸ் லிஸன் பண்ணினீங்களா?

பாரதி நினைவுநாள் நிகழ்ச்சியாக ஜெயா தொலைக்காட்சியில் ராகமாலிகா இன்று வந்தது. வழக்கம் போல விஜய் ஆதிராஜ் தமிங்கிலத்தில் தொடங்கினார். அதில் பேசிய சொற்றொடர்களைக் கேளுங்கள்.
"பாரதி எல்லாருக்கும் ஒரு இன்ஸ்பிரேஷன் இல்லையா?
அவர் ஆயிரக்கணக்கான பாடல் எழுதியிருக்கார். அவரோட நிறைய ஸாங்க்ஸ் படங்கள்ல கம்ப்போஸ் பண்ணியிருக்காங்க.
இந்த எபிஸோட் அவரை ரிமெம்பெர் பண்ற மாதிரி அமைச்சிருக்கோம்
அவரோட திரைப்பட(?) டூயட் ஸாங்க்ஸ் ஃபர்ஸ்ட் ரவுண்ட்ல பாடுவாங்க.
நீங்க எந்த ஸாங்க் பாடப்போறீங்க?
வெரிகுட்.
ஒரு சின்ன ப்ரேக்."

பிற நிகழ்சிகளில் ஆங்கிலம் கலப்பதை விடுங்கள். இன்றாவது, பாரதி நினைவு நிகழ்சி என்ற ஒரு மரியாதையாவது காட்டியிருக்கலாம். இசைக்கு மொழி கிடையாது என்று ஒரு சாக்கு சொல்லிவிடலாம். ஆனால், பாடலுக்கும், கவிதைக்கும் மொழியின் ஆழம் அடர்வு உண்டு. அந்த அளவிற்காவது பாரதியின் பாடல் என ஒரு மரியாதை இருந்திருக்க வேண்டும்.
இதைச் சொல்லப்போனால் " இது ஜனரஞ்சகமான, பொதுமக்களுக்குப் போய்ச் சேரும் நிகழ்ச்சி. இதிலெல்லாம் ரொம்பவும் மொழித் தரம் என்றெல்லாம் பார்க்க முடியாது " எனப் பதில் வரும். அதற்காக இப்படியா?
தேவுடா!

12 comments:

 1. ஸ்ரீமங்கை (சுதாகர்)
  நல்ல அவதானிப்பு. இது மாதிரியான
  அளவு மீறல்கள் நாகரீகம் என்ற பெயரில் தமிழ் தொலைக்காட்சிகளில் எப்போதும் நடை பெறும் அவலம்தான். அதுமட்டுமல்லாது அவர்களும் அவர்கள் தமிழ் உச்சரிப்பும்...ம்..ம்..என்னத்தை சொல்வது?

  ReplyDelete
 2. சரியாகச் சொன்னீர்கள்

  இந்த ராகமாலிகா நடத்துகின்றவரின் தமிழ்போல எரிச்சலூட்டும் எந்தத்தமிழினையும் நான் அண்மைக்காலத்திலே கேட்டதில்லை. நம்ரீவியூடாகப் பார்க்கும்போது, சொந்தக்கணணியென்றே பாராமல் அடித்து நொருக்கலாமா என்று தோன்றும்.

  ReplyDelete
 3. நியாயமான கோபம் சுதாகர்..ஆனால் 'காந்தி ஜெயந்தி'யை முன்னிட்டு உலக தொலைக்காட்சியில் முதல் முறையாக அர்ஜுனின் ஆக்ஷன் படம் போடுவார்கள் பாருங்கள் அந்தக் கொடுமையை விட இது சின்ன கொடுமை என்ற பரிதாப நிலமையில் நாமேல்லாம் இருக்கிறோம்!!

  ReplyDelete
 4. Anonymous11:34 PM

  //இந்த ராகமாலிகா நடத்துகின்றவரின் தமிழ்போல எரிச்சலூட்டும் எந்தத்தமிழினையும் நான் அண்மைக்காலத்திலே கேட்டதில்லை//


  சூரியன் எப் எம்மில் 2 3 பொண்ணுங்க வரும் பாருங்க..அதுங்க(?) பேசும் தமிழைக் கேட்டால் ..அதை என்ன வென்று சொல்வது...பிறவிப் பெரும் பயன் அடையலாம்.
  -yaaro-

  ReplyDelete
 5. நான் இவற்றையெல்லாம் பார்க்க வாய்ப்பில்லை. இப்படி ஆங்கிலத்தினை தேவையின்றி கலப்பது ஒரு பாணியாகி வருகிறது. பிற மொழிகளில் எந்த அளவு இது பிரபலமாக உள்ளது என்பதை யாராவது விளக்கலாம். இந்தியாவில் நான் பார்த்த ஒரு சில இந்தி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் இதே போல் கலந்து பேசுவதை கவனித்தேன். இவை வலிந்தே செய்யப்படுகின்றன

  ReplyDelete
 6. // பாரதி நினைவு நிகழ்சி என்ற ஒரு மரியாதையாவது காட்டியிருக்கலாம் //

  அதற்கு விஜய் ஆதிராஜுக்கு பாரதி என்றால் யார் என்று தெரிந்திருக்க வேண்டுமே..

  ReplyDelete
 7. உண்மையாகவே பாரதியின் பாடல்கள் மேல் பற்றுள்ளவர்கள் இது போன்ற நிகழ்ச்சிகளைப் பார்க்கமாட்டார்கள். இதை `விரும்பி' பார்ப்பவர்களுக்கு பாரதிக்கும் பாரதிதாசனுக்குமே கூட வித்தியாசம் தெரியாமலிருக்கும்.

  ReplyDelete
 8. தனியார் தொலைக்காட்சிகள் இம்மாதிரியான தமிழை ஊக்கப்படுத்துகின்றன, இருப்பினும் மாற்றம் நம்மிடமிருந்தே ஆரம்பிக்க வேண்டும், நம்மில் எத்தனை பேர் தினசரி வாழ்க்கையில் ஆங்கிலக் கலப்பில்லாமல் பேசுகின்றோம் ? இன்றிலிருந்து முயற்சி செய்வோமா ???

  ReplyDelete
 9. ஸ்ரீமங்கை,

  ரியலி? இப்படி எந்தெந்த சாங்ஸ் ப்ளே பண்ணாங்க? நீங்க எதை லைக் பண்ணி லிஸன் செஞ்சீங்க?

  கேக்கவே ஹேப்பியா இருக்கு!

  ReplyDelete
 10. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 11. பின்னூட்டமிட்ட நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்.
  துளசி! தாங்க்ஸ் ஃபார் தி இன்ஸ்பிரேஷன்.
  தமிழ்ல இங்க்லீஷ் பேசமுடியும்னு எல்லாருக்கும் எக்ஸம்ப்லரியா இருந்து காமிக்கிற டி.வி சேனல்களுக்கு ஒரு பிக் பிக் தாங்க்ஸ் சொல்லிட்டு, ஃப்யூச்சர்ல எப்படி தமிழை கில் பண்ணறதுன்னு டீ.வில பாத்து தெரிஞ்சுப்போம்.

  ReplyDelete
 12. Anonymous10:32 PM

  I watch this program "ragamalika" just to see carnatic musicians round.:-)

  ReplyDelete