Friday, October 07, 2005

பிடித்த புத்தக அலசல்-மெளனத்தின் நாவுகள்

நண்பர்களே,
படித்த கவிதைகளை அலசுவதென்பது ஒரு அலாதியான இன்பம்..படித்த கவிதைகளில் தாக்கிய வரிகளைப் பற்றி எழுதுகிறேன். ( நானே சொந்தமாய் எழுதி அறுப்பதைவிட இது பரவாயில்லை).
மெளனத்தின் நாவுகள் - கவிதைத்தொகுப்பு .
இயற்றியவர் : அபி.
------------------------------------------------------------

"ஏதோ ஒரு விடையை
என்னுள் வாங்கியதால்
எத்தனையோ
வினாக்களுக்குத் தாயானேன்.
அவ்வினாக்களின் மூலம் தேடிப்போகிறேன்"
என்று தன் அலசல்களை அறிவித்தவர் அபி. "கடவுளின் சோதனைச்சாலை விடுத்து தன் சொந்தச் சோதனைச்சாலைக்கு செல்லும்" காரணமாக இதைச் சொன்னார்.
கவிஞர் மீராவுடன் இணைந்து பணியாற்றியவர். 70'ச் களில் தமிழ் கவிதையில் புதுக்கவிதைஎ
ன்ற பரிமாணத்தில் அவருக்கென தனிப்பாணியை வகுத்துக்கொண்டார். 60களில் தமிழ் இன உணர்வு கொந்தளித்தபின், எழுபதுகளில் சிறிது அடங்கி, பரீட்சார்த்த முறைகளை கவிஞர்கள் கையாளத்தொடங்கினர். கிப்ரானிய மொழி வீச்சும், எளிய வார்த்தைகளில் உணர்வுகளை செறிவாக்கிக் கொட்டும் வித்தைகளும் தமிழ்க்கவிதைகளில் இடம்பெறத்தொடங்கின. கண்ணீர்ப்பூக்கள், கறுப்பு மலர்கள் என மு.மேத்தா, காமராசன் போன்றோர் தொடங்கியவை, சாதாரணமாகக் கவிதை படிக்கத் தயங்கும் மக்களுக்கு புதுக்கவிதை படிக்க ஆர்வம் பிறப்பித்தாலும், ஒரு படி மேலே போய் உன்னதமான கவிதைஉத்திகளை சிறப்பாகக் கையாண்டதில் சிலருக்கே அபி போன்ற பெரும்பங்கு உண்டு. "மொளனத்தின் நாவுகள்" - அதன் சாட்சி.
படிமங்கள் கையாள்வதில் அவரது சிறப்பு. மீரா அவர்களும் , அப்துல்ரகுமான் அவர்களும்
அபியின் கவிதைத்தொகுப்பினை பிற பதிப்பகத்தார் வெளியிட தயக்கம் காட்டிய போது, கொ
தித்தெழுந்து , சொந்தமாகவே "அன்னம்"என்ற பதிப்பகத்தை சிவகங்கையில் தொடங்கினர் -எ
ன்பது வரலாறு. "பாலையும் நீரையும் பகுத்தறியாப் பாமரர்களே, அன்னம் பாலைப் பகுத்துக் காட்டுகிறது" என்ற உதாரணமோ- அன்னம் என்ற குறியீட்டுப் பெய்ர்?
புதுக்கவிதையின் புதுப் பரிமாணங்கள் அறிந்துகொள்ள விரும்புபவர்கள் , தமிழ் புதுக்கவிதை
யின் உண்மையான முன்னோடிகள் குறித்து அறிந்துகொள்ள நினைப்பவர்கள், அபியை அவசியம்
அறிந்துகொள்ளவேண்டும். இக்கவிதைத்தொகுப்பின் முன்னுரையை கவிக்கோ அப்துல்ரகுமான்
அவர்களும், முடிவுரையை கவிஞர் மீரா அவர்களும் வழங்கியிருக்கின்றனர்.

அபியைப் படிக்குமுன், அவ்வுரைகளைப்படிப்பது நல்லது. ஏனெனில். அபியின் வார்த்தைகளின்
எல்லைகளை வரையறுப்பது கடினம். சுழன்று சுழன்று ஆழம்காண இயலாத பரிமாண எல்லைக
ளுக்கு இட்டுச்செல்லும் சக்திவாய்ந்த வரிகள் அவை.

கலீல் கிப்ரானின் வலிகள் குறித்து வருந்திய கவிஞர் "அம்மானுடம்பாடியைத் துன்புறுத்தியபோது இருந்திருந்தால் நான் இப்படித்தான் பாடியிருப்பேன் " எனக் குறிக்கிறார்.

மதவாதிகளால் லெபனாலின் துன்புறுத்தப்பட்ட கலீல்கிப்ரான், அமெரிக்காவில்
சரண்புகுந்தபின்னும் லெபனானின் பஞ்சம் ஏற்பட்டபோது "டெஅட் அரெ ம்ய் பெஒப்லெ" என்று இரங்கல்
பாடினார். இதனை வியந்து
"உன் வேர்களை அருவெருக்கும்
நிலங்களை நோக்கி ஏன் உன் விழுதுகளை
அனுப்புகிறாய்?" என்றார் அபி.
வார்த்தைகளின் வீச்சைக் கவனியுங்கள்! எவ்வளவு உன்னத உதாரணம்!


அத்தோடு விடவில்லை அபி...
லெபனான், கிப்ரானின் கவிதைகளை தடை செய்தும், அவர் லெபனான் குறித்து கவலைப்பட்டதை,
"நீ பாசமுள்ள பறவையாய் இருந்தால்
உன் முட்டைகளை புற்றிலா இடுவாய்?"
என்கிறார்.

கிப்ரானுக்குக் கிட்டிய வதைகளை விவரிக்கிறார்...
"நீ நிற்கும்
சிலுவையின் நிழலில்கூட
ஆணிகள்..."
என்ன ஒரு ஆழம்...! இயேசுநாதரை சிலுவையில் அறையும் போது உலகில் விழுந்த வலிகள்
உறைந்த சொற்களாய்...

லெபனானைச் சபிக்கிறார் இவ்வாறு- அறம்பாடலாய்...
"லெபனானின் பள்ளத்தாக்குகள்
அழகின் கம்பீரமான உச்சரிப்புகளை
இழந்து போகட்டும்"
அதனால்தானோ, அதன்பின் இன்னும் ஒரு கிப்ரானை லெபனான் கர்ப்பம் தரிக்கவில்லை?


இன்னும் வரும்.
அன்புடன்
க.சுதாகர்

6 comments:

  1. Anonymous8:22 AM

    some lines / words are not displayed properly (for me only or for all ?)

    ReplyDelete
  2. சுதாகர்,

    வலைப்பூவுக்கு வந்துட்டீங்களா... வாங்க வாங்க.

    ReplyDelete
  3. அபியின் கவிதைகளைப் படித்ததில்லை. அறிமுகப் படுத்தியதற்கு நன்றி

    ReplyDelete
  4. மூர்த்தி,
    நன்றி. கொஞ்ச நாளாவே எழுதிக்கொண்டிருக்கிறேன். யாரும் படிக்குமளவிற்கு இல்லாவண்ணம்! அபியின் கவிதைகள் குறித்து கொஞ்சம் மேலும் எழுதலாமென இருக்கிறேன்.
    ஜேகே,
    பின்னூட்டத்திற்கு நன்றி. இவ்வூக்கம் மேலும் அபியின் கவிதைகள் குறித்து சிலாகிக்க வைக்கும்.
    அன்புடன்
    க.சுதாகர்.

    ReplyDelete
  5. Anonymous1:30 PM

    வேண்டாம்

    ReplyDelete
  6. அன்பின் அனானிமஸ்,
    தங்கள் பின்னூட்டத்தை நீக்கியதற்கு காரணம், அது சாதகமாக இல்லை என்றில்லை. உங்கள் கருத்துக்களை தாராளமாக இடுங்கள். ஆனால், சொல்லும் விதம் என ஒன்று இருக்கிறதல்லவா?
    அபி, 1970 களில் கல்லூரியில் ஆசிரியராகப் பணிபுரிந்தவர். அப்போது அவருக்கு 25 வயது என குறைந்தபட்சம் மதிப்பிட்டாலும், இப்போது 50 வயதைத் தாண்டிய முதிராசிரியர். அவரை, குறைந்தபட்சம் "இதுங்க" என்று மரியாதைக்குறைவாகச் சொல்லாமல் இருந்திருக்கலாம். வயதுக்காகவாவது மரியாதை கொடுப்பதென்பது மனிதப்பண்பாடு.
    அவரது கவிதை குறித்து தங்களது கருத்து வேறாக இருக்கலாம். அது உங்கள் உரிமை. "குப்பை" என்று சொல்வது சரியான பதமாக இல்லை. எத்தனைதான் வெறுப்பாக இருந்தாலும் பண்பு மீறவேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
    அவரது கவிதைத் தொகுப்பு மிக்க மரியாதையுடன் தமிழ் புதுக்கவிதை ஆய்வுகளில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. மொளனத்தின் நாவுகள் - இப்போது அச்சில் இல்லை. சில நூலகங்களில் மட்டுமே கிடைக்கின்றன. அவருக்கு என்னைப்போல ஒரு கொ.ப.செ தேவையே இல்லை. ஒரு சுதாகர் , வலைப்பதிவில் கவிதை குறித்து எழுதுவதால், விற்பனையோ, விளம்பரமோ அதிகரித்துவிடாது!
    வேண்டுமென்றால் மீண்டும் உங்கள் கருத்தை இடுங்கள் - பண்பான வாக்குகளுடன். இது அதிகமான வேண்டுகோள் இல்லையென நினைக்கிறேன்.
    அன்புடன்
    க.சுதாகர்.

    ReplyDelete