”நானும் வந்தேதான் ஆகணுமா,?” என்ற அந்தப் பெண்ணை வியப்புடன் பார்த்தேன். அவர் அப்படியெல்லாம் சொல்கிற ரகமில்லை. இளம் வயதிலேயே அனுபவமிக்க ஆலோசகர். 2003ம் வருடத்திய ப்ராஜெக்ட் அவார்ட் ஒன்று பெற்றவர்.
“நீ வராமல் , அந்த கிழட்டு சர்தார் ஆர்டர் கொடுக்கமாட்டாம்-மா. ஒரு நாள் தகவல் சேகரிக்க , அடுத்தநாள் ப்ரசெண்டேஷன் கொடுக்க என்று ரெண்டு நாள் போதும். இப்ப வேற ப்ராஜெக்ட்ல நீ பிஸி இல்லையே?”
“இல்ல. ஆனா..” என்று இழுத்துவிட்டு ‘ சரி “ என்றார். ஒரு தடவை அந்த நடுத்தர அளவிலான எஞ்சினீயரிங் டிஸைன் கம்பெனிக்குப் போய் வந்திருக்கிறார், எனக்கு முன்பு.
மும்பையின் புறநகர்ப் பகுதி ஒன்றில், கரடு முரடான சாலையில் ஒரு பழைய மில் காம்ப்பவுண்ட் ஒன்றினுள் அந்த கம்பெனி இருந்தது. வாடிக்கையாளர்கள் கேட்டவித்த்தில், கருவிகளோ, அதன் பாகங்களோ டிஸைன் செய்து, ப்ரோட்டோ டைப் கொடுப்பார்கள். சரியாக வந்துவிட்டால், பின்னர் முழு தயாரிப்பும் நடக்கும். வெளிநாட்டு , வணிகம் கணிசம்.
தாங்கள் செய்யும் வேலைகள் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் இருப்பதால் நாட்கள் அதிகமாகிறதோ என்ற எண்ணம் உருப்படியாக சிலருக்கு உதிக்க, எங்களை, அவர்களுக்கு வேண்டியது போல மென்பொருள் ஒன்றை உருவாக்கித் தரச் சொல்லியிருந்தார்கள். 2002-ல் தொடங்கி ஒரு வருடமாகப் பேச்சு வார்த்தை நடந்து, இறுதியில் எங்களை ஒரு சாம்பிள் workflow ஒன்றை உருவாக்கிக் காட்டப் பணித்திருந்தனர். கிழட்டு சர்தாரை நான் ஒரு முறைதான் சந்தித்திருக்கிறேன். பலமாக சிரிப்பார். சர்தார்ஜிகளூக்கே உண்டான திறந்த பேச்சு, உரத்த குரல், விலை என்று வரும்போது புலியாக பேரம் பேசுதல்...விடுங்கள்.
நானும் , ஆலோசகரும் அங்கு போனபோது காலை ஷிப்ட் ஷிப்ட் முடிந்து ஆட்கள் வெளிவந்து கொண்டிருந்தனர். பெண்கள் ஒரு குழுவாக இருந்து மொத்தமாக வெளிவந்து ஓட்டமும் நடையுமாக பஸ் நிறுத்த்த்திற்கு விரைந்தனர். சாலையின் ஓரம் விளக்குக் கம்பங்கள் சாய்திருந்தன. மாலை ஷிப்ட் ஆட்கள் நுழைய வேண்டும்.
சர்தார்ஜியின் அறையில் நிபுணர் அமைதியாக அமர்ந்திருந்தார். சர்தாரின் பேச்சு பொதுவாக இருந்தாலும், பார்வை அவர்மீதே இருந்தது. ஜொள்ளுக்கு வயதில்லை.
“நீ வேணுமான, ஷிப்ட் இன் சார்ஜ்கிட்ட தேவைகள் பத்தி பேசப் போலாம்மா” என்றார் சர்தார். நிபுணர் அமைதியாக எழுந்து வெளியேறினார். இன்னும் இருவர் வந்து சேர, சர்தாரின் அறைக்கு அடுத்த கான்பரன்ஸ் அறையில் புகுந்தோம். நான் கம்பெனியின் தோற்றம் வளர்ச்சி, நாலு வருட பைனான்ஷியல் புள்ளி விவரம் (சற்றே ஜோடிக்கப் பட்டவை) குறித்து அளந்து கொண்டிருந்தேன்.
இத்தனை வருட அனுபவத்தில் தெரியும் ஒரு விவரம் - நீங்கள் கார் கேரேஜில் கம்பெனி தொடங்கி நாலு பில்டிங் வாங்கிப் போட்ட்தையும், இரு பணியாளர்களோடு தொடங்கிய கம்பெனி இன்று 200 பேர் அமெரிக்காவில் ( 150 பெஞ்ச் -இல்) இருப்பதையும் ஒரு பயலும் கேட்கமாட்டான். சுத்த வேஸ்ட். நேராக பாயிண்ட்டுக்கு வந்துவிடுங்கள்.
எனது செல்போன் அதிர, மன்னிப்புக் கேட்டபடி எடுத்துப் பார்த்தேன். மெஸ்ஸேஜ்? அதுவும் என் நிபுணரிடமிருந்து? ..” Please come out. Urgent" என்ற வகையில். அதிர்ந்து போனாலும், வெளிக்காட்டிக் கொள்ளாமல் ’ஒரு நிமிடம்’என்றபடி வெளியே வந்தேன். அவர் கண்களில் நீர் கட்டியிருந்தது.
“இந்த ப்ராஜெக்ட் வேணாம் சுதாகர். இவங்க.. நடத்தை சரியில்ல. போன தடவையே கவனிச்சேன். மேல வந்து விழறது, கையப் பிடிக்கறது. தொட்டுக் கூப்பிடறது... இன்னிக்கு அவங்க ரூம்ல பேசிட்டிருக்கும்போதே, கொஞ்சம் விரசமா ஜோக்.. அதுவும் இன்னொருத்தனும் சேந்துகிட்டு..”
”ஆல் ரைட். நான் சர்தார் கிட்ட பேசிக்கறேன். டீம் பூரா ஆம்பளைங்களாப் போட்டுறலாம்.”
“இல்ல. ப்ராஜக்ட விட்டுறலாம்-ங்கறேன். இங்க வேலை பாக்கற பொம்பளைங்களும் ரகசியமா சொன்னாங்க. பைசா கொடுக்க மாட்டாங்களாம். வேணும்னே அது இதுன்னு சொல்லி, லீகல் கேஸ் வரை போவாங்களாம். பார்ட்டி , விட்டாப் போதும்னு ஒடவைப்பாங்களாம். இதுக்கு முன்னாடி மூணு கம்பெனி விட்டுட்டுப் போயிருக்காங்க. பொம்பளைங்களுக்கு பாதுகாப்பே கிடையாதுங்கறாங்க”
நான் அமைதியாக இருந்தேன். என் டார்கெட்-ல் பெரிசாக ஓட்டை விழும். அமதாபாத்தில் பாஸ் குதியோ குதி என்று குதிப்பான்.
உள்ளே நுழைந்தேன். “ ஸாரி, என்னோட வந்தவருக்கு அவசரமாக மற்றொரு ப்ராஜெக்ட்டில் அவசர அழைப்பு வந்திருக்கிறது. எனவே அவர் இப்பவே போகிறார்”
“அப்ப டெமோ?” என்றார் சர்தார் கோபமாக. “ நாளைக்கு , அடுத்த நாள் வந்து டெமோ கொடுக்கச் சொல்லுங்க. நீங்க அனாவசியமா வரவேணாம்”.
“அத அப்புறம் பேசலாம்” எனத் தவிர்த்தேன். பின் சர்தாரின் அறைக்குச் சென்றபின் அவரது பேச்சைக் கூர்ந்து கவனித்தேன். அடிக்கடி ஒரு ஜோக். அதுவும் சற்றே X ரேட்டிங். அருவருக்கக் கூடியதில்லை எனினும் பெண்கள் இருக்கையில் பேசும் பேச்சல்ல. அவரோ மிகவும் வெளிப்படையாக , பெண் சூபர்வைஸர் வ்ந்து நிற்கும்போதும் ஜோக்குகளை வீசினார். கூட இருப்பவர்கள் எடுத்து விட, தனது கம்பெனியில் வேலை பார்க்கும் பெண்களின் பெயர் கொண்டே சில ஜோக்குகள். எனக்கு ஓரளவு கம்பெனியின் தரம் புரியத் தொடங்கியது.
இரு நாட்கள் கழித்து சர்தாரிடமிருந்து போன் வந்தது.. “ ஸாரி” என்றேன். “ எங்கள் முழு டீம், மற்றொரு ப்ராஜெக்டில் ஈடுபட்டுவிட்ட்து. அடுத்த ப்ராஜெக்ட் நாங்கள் எடுக்க இன்னும் ஆறுமாதமாகும்” சர்தார் திட்டியபடி போனை வைத்தார். அமதாபாதில், எனது பாஸ்-க்கும் அவரது தலைவருக்கும், ஹெச். ஆர் தலைவருக்கும் ஏன் இந்தப் ப்ராஜெக்ட் நாம் எடுக்க்க் கூடாது? என்பதை விளக்கி ஒரு மின்ன்ஞ்சல் அனுப்பினேன். அனைவருமே அந்த முடிவை ஆதரித்தனர். வேறு ப்ராஜெக்ட் கிடைக்காமலா போய்விடும்?. ஆர்டகளுக்கு, இன்னும் கொஞ்சம் கூடுதலாக நாய் மாதிரி சுத்தணும். ஆனா நாய் மாதிரி எல்லா எலும்புத் துண்டுக்கும் வாலாட்டக் கூடாது.
11 வருடங்களின் பின் இன்று அதே வளாகத்தில் சென்றிருந்தேன். அந்தக் கம்பெனி அங்கு இப்பொது இல்லை. தெருக்கள் அகலமாக, விளக்குக் கம்பங்கள் சீராக இருந்தன. ஒவ்வொரு கம்பெனியின் நுழைவாயிலிலும், உள்ளே கட்டிடங்களின் சுவர்களிலும்,” வேலை செய்யுமிடத்தில் பாலியல் வன்கொடுமை, சீண்டுதலுக்கு ஆளாகிறீர்களென்றால், பயப்படாமல், எங்களிடம் பேசுங்கள்” என்று பெரிய சுவரொட்டிகள் , செல்போன் எண்களுடன், மனித வள துறை அதிகாரியின் மின்னஞ்சல் விவரங்களுடன்...மாலை ஷிப்ட்டில் பெண்கள் எவரும் இல்லை.
Anathakrishnan Pakshirajan பி.ஏ.கே சார் டிவியில் சொன்னது போல் எதிர்காலம் இன்னும் பாதுகாப்பாக இருக்கும் என்ற நம்பிக்கை வருகிறது. எங்கிருந்து எங்கு வந்துவிட்டோம்! இன்னும் போகலாம். போகவேண்டும்.
ஜெய வருடம் நம்பிக்கையையும், தைரியத்தையும் தரட்டும்.

No comments:
Post a Comment