கோடை
------
தேனீர்க்கடை பெஞ்சுகளை
நனைத்துச் சொட்டி, சாலையோரம்
சிறுகுட்டையாய்ச் சேர்ந்த நீர்
அந்நாளின் முதல் பேருந்தின் பின் சக்கரத்தில்
சகதியாய்ச் சிதறிப் பயணிக்க,
நாக்கில் நீர்சொட்டி,
நக்கிக் குடிக்கவந்த
கறுப்பு நாய்
தொங்கிய முலைகள்
கோபமாய் ஊசலாட,
பேருந்தின் பின்னோடி
எழுப்பிய குரைப்புகள்.
மின்வெட்டில் தயங்கி நின்ற
மின்விசிறிகளின்
அழுத்திய மொளனத்தில்
மூடிய கதவுகளினின்றும்
மிதந்து நீளும்
வியர்வைப்
பெருமூச்சுகள்..
இவைபோதும்
கோடைவந்ததென்று
அறிவிக்க.
சூரிய உதயங்களின் அவசியமேயின்றி.
சுதாகர் உங்களின் தொடர்பு சாதங்களை (செல், மின்னஞ்சல்) narain at gmail dot com க்கு அனுப்புங்கள். அடுத்த வாரம் வணிக சந்திப்புக்காக மும்பாய் வருகிறேன். நேரமிருப்பின் கலந்துரையாடலாம்.
ReplyDelete