Saturday, May 21, 2005

விஜெய் டென்டுல்கர்- சில குறிப்புகள்

விஜெய் டென்டுல்கர்- சில குறிப்புகள்

இந்திய நாடக உலகில் நவீன நாடகங்களில் குறிப்பிட்டுச் சொல்லவேண்டியவர்களில் முக்கியமானவர் விஜெய் டென்டுல்கர்.மராத்தியிலும், இந்தியிலும் அவர் எழுதிய நாடகங்கள் நாடக உலகை ஒரு கலக்கு கலக்கின. ஐம்பது வருட சாதனையாக அவர் முப்பதுக்கும்மேற்பட்ட நாடகங்களையும், 23 ஓரங்க நாடகங்களையும் எழுதியிருக்கிறார். இது தவிர 11 குழந்தைகள் நாடகங்களையும் மராத்தியில் எழுதியுள்ள அவருக்கு பத்மபூஷன், சங்கீத நாடக அகாடமி ஃபெல்லோஷிப் தேடி வந்ததில் ஆச்சரியமில்லை.

மராத்தி நாடக உலகில் பெரும் புகழும் மரியாதையும் வழங்கப்பெற்ற டென்டுல்கர், பு.லெ. தேஷ்பாண்டேயின் சக கால படைப்பாளியாக இருந்ததில் , மராத்தி நாடகம் செழித்தது. துணிவாகவும் நேரடியாகவும் ஜொலிக்கும் கதாபாத்திரங்களைக் கொண்ட அவரது நாடகங்கள் சமூக எதிர்ப்பையும் சிலசமயங்களில் பெற்றன.
சாக்காராம் பைண்டர் ( Sakharam Binder) என்ற நாடகம் 1974ல் முதன்முறையாக அரங்கேற்றப்பட்டதும், இந்திய அரசால் தடை செய்யப்பட்டது.நாடகக் கருவும், பேசப்பட்ட மொழியும் அன்று அரசால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

அமெரிக்கா "விஜெய் டென்டுல்கர் விழா" என 2004-ல் அவரது படைப்புகளை மேடையேற்றி கெளரவித்தது. இதனை இந்திய அமெரிக்க கலைக்குழு ( Indo American Art Council) மற்றும் South Asian Theater Group,American Theater Grop, Queeen's Museum of Art, the Pan Asian Repoertory, The Play Company போன்ற குழுக்கள் செப்டம்பர் 04- நவம்பர் 04 வரை அமெரிக்காவில் பல இடங்களில் நடத்தி சிறப்பித்தன.
விஜெய் டென்Tடுல்கரை இந்தியாவில் விட பிற நாடுகளில் அதிகம் தெரிந்து வைத்திருக்கின்றனர். முக்கிய காரணம், அவரது நாடகங்களை பிற இந்திய மொழிகளில் உருவாக்கப் பலரும் தயக்கம் காட்டியமையே.

அவரது காதம்பரி II என்ற சமீபத்திய நாடகத்திற்கு அண்மையில் ப்ரியதர்ஷினி விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சிக்குரியது. தனது நாடகங்களுக்கு தற்போது கிடைத்துவரும் சிறப்பான இயக்கங்களுக்கும், நாடக நிகழ்வுகளின் தரத்திற்கும் மகிழ்ச்சி தெரிவித்திருக்கும் இம்முன்னோடி,"இவ்வாறான சிரத்தை காணப்பெறும்போது, 50 வருடங்களாக நாடகங்கள் இயற்றிவரும் என்போன்றவர்களும் மேலும் ஊக்குவிக்கப்படுவது ஆச்சரியமில்லை" என்கிறார் மனநிறைவோடு.

தமிழில் அவரது நாடகங்களை எவரேனும் எடுத்துச் செயலாற்றினால் , தமிழுலகம் வி.சி. காண்டேகர் என்னும் எழுத்தாளரை முன்பு அறிந்ததோடு தேங்கி நிற்காமல், பு.லெ. தேஷ்பாண்டே என்னும் பெரும் நாடக ஆசிரியரை பெயரளவில் அறிந்ததோடு நிற்காமல்,நவீன நாடகங்களில் புது ஓட்டத்தோடு பொலிவு பெறும்.

4 comments:

  1. //தமிழில் அவரது நாடகங்களை எவரேனும் எடுத்துச் செயலாற்றினால்//
    நன்று.

    ReplyDelete
  2. நன்றி சுந்தரவடிவேலு.
    டென்டுல்கரின் நாடகங்கள் தமிழில் வருவதற்கு மூலதனம் ஒரு பொருட்டாக இருக்காது என்பது என் எண்ணம். வெளிநாட்டில் வாழும் மராட்டியர், தமிழர் குழுக்கள் கண்டிப்பாக உதவ முன்வரும். ஆக்ஸ்ஃபோர்டு ப்ரெஸ்ஸின் ஒரு புத்தகமாக டென்டுல்கரின் நாடகங்களின் தொகுப்பு வந்துள்ளது( சாக்காராம் பைன்டர் உள்பட). நல்ல தொகுப்பு அது. சரியாக , நமது நாடகக்குழுக்கள் அணுகுவராயின் மிகச்சிறந்த நாடக வடிவம் டென்டுல்கரின் படைப்புகளுக்கு தமிழில் கிடைக்கும்.

    ReplyDelete
  3. நமக்கு தெரிஞ்சதெல்லாம் சச்சின் டெண்டுல்கர் தான்..! ம்... இருந்தாலும் விஜய் டெண்டுல்கரை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி..!!

    ReplyDelete
  4. Anonymous8:03 AM

    A man of words and not of deeds is like a garden full of weeds.

    ReplyDelete