பருந்துகள்
-------------
பருந்துகளை
விரும்பியிருந்தேன்,
போன வாரம்வரை
மற்ற பறவைகள்
அண்ணாந்து பார்க்கும்
உயரங்களில்
கூரிய நகங்களால்
வானைக் கிழித்துப் பறக்கும்
பருந்துகளின் உயரப் பறத்தல்
கழுத்து வலிக்கப் பார்க்கவைக்கும்
சிறகடிப்பு கிளம்பும்வரைதான்.
உயரங்களிலோ மோனத்தவத்தில்
சிலைபோல உறைந்த பருந்தின் பறப்பு..
நிழல்கள் புவியில் படியாது
விண்ணையும் மண்ணையும்
பறந்தே ஆளும் பருந்தின்
கால்பிடியில் கற்களிலும்
துளைவிழும்.
வசந்தம் வந்தால் பாடாது,
வண்ணங்கள் வால்களில் மாற்றாது.
துணை மறைந்தால் சோகமாய்க்
கிளைகளில் கூவாது,
பறத்தல் மட்டுமே
தவமாய்க் கொண்ட
பருந்தை நான்
வியந்திருந்தேன்..
உயரப்பறத்தலிலும்
பார்வை புவியில் நாறும்
பிணங்களிலும், எலி,முயல்களிலும்
மட்டுமேயென
போனவாரம் அறிந்த வரை.
இருந்தாலும் பருந்துகள் பறப்பதை பார்த்துக் கொண்டிருப்பது எனக்கு எப்போது பிடிக்கும். இது ஒரு மோனத்திற்கு இட்டுச் செல்லும். ஒரு குறிப்பிட்ட பருந்தை தொடர்ந்து பார்ப்பது அதன் போக்கை கண்களால் பின் தொடர்வது ஒரு சுகமான அனுபவம். இதற்காகவே வானம் தெரியும் சன்னல்கள் அருகில் தான் என் இருக்கை இருக்க வேண்டும் என்று போராடி பெற்றதுண்டு. மேலும் வானமும் இருப்பதால்...:)
ReplyDeleteநன்றி பாலாஜி!
ReplyDelete