Monday, February 21, 2005

Pulinagak Konrai- my observations 3

பாத்திரங்களின் சொற்ப்ரயோகங்கள் (º¢Ä ÁðÎõ)
--------------------------------------

தென்கலை ஐயங்கார் வார்த்தைப் ப்ரயோகங்கள் 19ம் நூற்றாண்டு- 20ம் நூற்றாண்டுத் தொடக்க வருடங்கள் ( 30கள் வரை)அதிக மணிப்பிரவாளமாகவே இருந்திருக்க வேண்டும்...( திருநெல்வேலித் தமிழ் கலந்ததாக - குறீப்பாக வானமாமலையில்) காலத்தால் ,சில வார்த்தைகள் இப்போது வழக்கில் இல்லை. இந்த CONVERSATIONAL DIALECT ஐக் கொண்டுவந்த விதம் பல இடங்களில் பாராட்டிற்க்கும், ஓரிரு இடங்களில் ஒரு மீள்பார்வைக்கும் வைக்கப்ப்படலாம்.

அன்றைய வக்கீல்/கல்லூரி படிப்புப் படித்தவர்களின் பேச்சில் ஆங்கிலம் பெரிதும் காணப்பட்டது.பெரும்பாலும் சொற்றொடர்கள் ஆங்கிலத்திலேயே இருக்கும். (18ம் நூற்றாண்டு இங்கிலாந்தில் லத்தீனில் பேசுவது படித்தவர்களின் அடையாளமாக கருதப்பட்டது போல. இதனை கவனித்துக் கொணர்ந்திருக்கிறார்.) ஆயினும் தமிழில் இருக்கவேண்டும் என்பதற்காக , சில உரையாடல்களைத் தமிழில் நகர்த்தியிருப்பது ( அது தென்கலை ஐயங்கார் dialect ஆக இருப்பினும்), conscious efforts போலத் தோன்றுகிறது.

வரலாற்றுப் பாத்திரங்களின் அறிமுகம் இயற்கையாக அமைந்துள்ளது. பாரதியின் அறிமுகம் அவருக்கே உரித்தான முத்திரையுடன் நம்மாழ்வாருடன் உரையாடுவதாகத் தொடங்கியது மிக இயல்பு.

" உன் பெயரென்னடா? நம்மாழ்வார்.. இந்தப்பெயரை வைச்சுண்டு சிறியன சிந்திக்க முடியுமா?." பக் 124

"நம்மாழ்வார் ஈயைப் போல வாழ்க்கை நடத்தவேணுமா?பெரிதாகவே நினை." பக் 125 சத்தியமான பாரதி முத்திரைகள்..

தூத்துக்குடி, ஒட்டப்பிடாரம், திருச்செந்தூர், திருவைகுண்டம் எனப் போகும் இடங்களில், பனங்காற்று வட்டாரமொழியில் கலந்திருக்கும். திருநெல்வேலித் தாமிரபரணியின் ஈரத்தோடு.. இது இருந்து பார்த்தவர்களுக்கு சற்று எளிதில் புலப்படும். சிதம்பரம்பிள்ளையுடனான உரையாடலில் திருநெல்வேலி வட்டாரமொழியோடு, தூத்துக்குடி வட்டாரவழக்கை சற்றுத் தூக்கலாகவே பயன்படுத்தியிருப்பது, மிக மிக நுண்ணிய வட்டார மொழி வேறுபாடுகளைப் பிடிப்பதில் ஆசிரியர் எடுத்துக்கொண்ட சிரமம் தெரிகிறது.

வ.உ.சிதம்பரம் பிள்ளையின் அறிமுகம் தொடங்குவது அவர் வீட்டில்.

'கறுப்பு, குள்ளம். துளைக்கும் கண்கள் (சிதம்பரம் பிள்ளை) பக் 115

"இந்த மழையில வாரத்துக்கு என்ன அவசரம். எங்கவீட்டுல காப்பி குடிப்பீரா?" பக் 115

வெகு இயல்பான வார்த்தைகளின் ப்ரயோகம். 80களிலும் இந்தக் கேள்வி பல வீடுகளிலும் கேட்கப்பட்டது. "பேரு என்ன? நம்மாழ்வாரா?.. ஐயங்கார்ல இந்தப் பேரு பாக்குது சிரமமாச்சே?" பக் 115

"பேரு பாக்குது" என்பது தனிவட்டார வழக்கு. தென் மண்டலத்தில் ( குறிப்பாக நெல்லைக்குத் தென் கிழக்காக )குறிப்பாக சைவப்பிள்ளைமார்கள் வெகு சகஜமாகப் பயன்படுத்தும் வார்த்தைப் ப்ரயோகம். சிதம்பரனார் இவ்வாறு பேசினார் என்றால் கண்களை மூடிக்கொண்டு நம்பலாம்.

சிதம்பரனாரின் நகைச்சுவை உணர்வு வரலாற்றில் பல இடங்களில் சிலகிக்கப்படுகிறது.. அது வெள்ளையர்களை எதிர்த்துப் பேசுவதிலாகட்டும், சுப்பிரமணிய சிவாவுடனும், பாரதியுடனும் பேசுவதிலாகட்டும் - தமிழிலும் ஆங்கிலத்திலும் அவரது satire பரவலாகவே வெளிப்பட்டது. இதனைக் கவனமாக அவரது உரையாடல்களில் ஆசிரியர் கையாடியிருக்கிறார். சிவாவுடன் சிதம்பரனார் மேடையினின்று மக்களிடம் பேசும்போது, அவர்களின் திடீர் உரையாடல்கள் மக்களை மேலும் தட்டியெழுப்பும். உற்சாகப் படுத்தும்.

உதாரணமாக
சிதம்பரம் ஒரு மேடைப் பேச்சில் சொன்னார் " வெள்ளையர்கள் இந்த நாட்டை மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறவேண்டும்" சிவா உடனே எழுந்தார். "ஏல சிதம்பரம். என்ன சொன்னாய்? மூட்டை முடிச்சுகளுடனா? அவை நம்முடையவை. எல்லாத்தையும் இங்கனயே போட்டுட்டு ஓடணும்னு சொல்லு"

இது போன்ற பேச்சுகள் சர்வ சாதாரணமாய் புழங்கிய காலத்தில் கதையில் நம்மாழ்வார் சிதம்பரனாரைச் சந்திக்கிறார். "..வடகலையா? தென்கலையா? தென்கலைதானே? அதான பாத்தேன். வடகலையார் தமிழ்ப்பேர் வைக்கிறதாவது." பக் 115 உள்சாதிப் பூசல்களை கிண்டலாகச் சொல்வதில் சிதம்பரனாரின் satire தெரிகிறது. "எந்த ஊரு? ஆழ்வார் பிறந்த ஊரா? நாங்குநேரியா? "நோற்ற நோண்பிலேன் நுண்ணறிவிலேன். " இதுதான உம்ம ஊர்ப் பாட்டு? உமக்கு ரெண்டும் இருக்கும்போல இருக்கே?"
சிதம்பரனாரின் சொல்லாடல் , கூர்மையான அறிவுத்திறம், சமயோசிதமாகப் பேசும் திறம் எல்லாம் வெளிப்பட அமைந்திருக்கிறது.

4 comments:

  1. புத்தகம் எங்குக் கிடைக்கும்? இந்தத் தருணத்தில் தென்கலை ஐயங்கார்களைப் பற்றி சுஜாதா ஒரு கதையில் குறிப்பிட்டது நினைவுக்கு வருகிறது: தென்கலை ஐயங்கார் பசங்கள் ஒன்று அமெரிக்காவுக்குப் போவார்கள் அல்லது சமையற்காரர்களாக ஆவார்கள்.
    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  2. þÐ ´Õ ¸¡ÄîÍÅÎ À¾¢ôÀ¸ ¦ÅǢ£Î. ¦ÀÕõÀ¡Ä¡É Òò¾¸ì ¸¨¼¸Ç¢ø ¸¢¨¼ì¸ Å¡öôÒñÎ. ¬í¸¢Äò¾¢ø Tigerclaw tree ±ýÚ penguin ¦ÅǢ¢ðÊÕó¾Ð.
    ̓¡¾¡ ¦º¡ýÉÐìÌ typical ¦¾ý¸¨Ä ³Âí¸¡÷ À¾¢ø þôÀÊ þÕì¸Ä¡õ "«¾¡§É À¡÷ò§¾ý. ¦º¡ýÉÅ÷ ż¸¨Ä§Â¡øÄ¢§Â¡? " ±ýÚ ÁÊÔõ þó¾ "¸¨Ä"ô §À¡Ã¡ð¼õ?!

    ReplyDelete
  3. சுஜாதா அவர்களும் தென்கலையென்றுதான் நான் நினைக்கிறேன். அவர் கூறியதை கான்டக்ஸுடன் பார்க்க வேண்டும். அதில் எள்ளல் இல்லை ஒரு வித வாஞ்சைதான் இருக்கும்.
    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  4. ராகவன்!
    நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை. என்னதான் முன்னேறினாலும், இந்த " கலை"ச் சண்டை biasedஆக கண்மூடித்தனமாகத் தொடர்கிறது என்னும் அர்த்தத்தில் சொன்னேன் ( ஒரு typical biased response). சுஜாதா போன்றோர்களை இதில் இழுக்க நான் நினைக்கவில்லை. மன்னிக்கவும் - எனது வரிகள் அப்படியொரு view தந்திருந்தால்.
    அன்புடன்
    க.சுதாகர்

    ReplyDelete