Saturday, February 19, 2005

Salaam Bombay!

சலாம் பாம்பே!
--------------
பத்து வருடங்களாகிவிட்டன - மும்பை எனக்குப் பரியச்சமாகி. கொஞ்ச நாள் வெளியிலிருந்தாலும், மும்பையுடனான touch விட்டுப்போகவில்லை.

மும்பையிலிருந்து வெளியேபோகணும்னா எல்லோருக்கும் ஆசைதான்.. இந்த நெரிசல், polllution,நிரம்பிவழியும் குப்பைக் கூளங்கள்,சேரிகள். முதல்ல சம வெறுப்பாயிருந்தது. இப்போ பழகிப்போச்சு.கொஞ்சம் கொஞ்சமாய் இந்த நகரின் நல்ல குணங்களும் தெரியவாரம்பித்தன.

1. சுறுசுறுப்பு.: மும்பை உறங்கியதாகச் சரித்திரமில்லை. என்னநேரமென்றாலும் மக்கள் போய்க்கொண்டும் வந்துகொண்டும் இருப்பார்கள். பேருந்துகளில் அடிபிடியிருக்காது. எங்கும் வரிசையில் நிற்கும் வழக்கம் பழக்கம் உண்டு- மின்வண்டிகளைத்தவிர.

2. நேரம் தவறாமை:அப்பாயிண்ட்மென்ண்ட்கள் உரிய நேரத்தில் நடைபெறும். நேரத்திற்கு மதிப்பு உண்டு.
அந்த நினைவில் சென்னையில் ஒரு அறிவியல் வல்லுநரிடம் அப்பாயிண்ட்மெண்ட்டுக்கு சம்மதம் கேட்டேன். " "நாளைக்கு வாருங்கள் " என்றார் ,நான் பார்க்கவேண்டிய நபர்." நாளை எத்தனை மணிக்கு?" என்ற என் கேள்விக்கு ஆச்சரியமாகப் பார்த்தார். "வாங்க எப்பவேணும்னாலும். பேசுவம்". இந்த பதில் பல மும்பைக்காரர்களுக்கு புதிது.
பிதுங்கிக்கொண்டு ஓடும் லோக்கல் மின்சார ரயில் ( western railway atleast) 8.14க்கு ப்ளாட்பார்மில் வருமென்றால் வரும். அது 8.16 ஆக வாய்ப்பில்லை.- சாதாரணமாக.

3. வேலை ,வேலை : இது பரவலாக இருக்கிறது.பிச்சைக் காரர்கள் அதிகம் என்றாலும், என்னமாவது விற்று, சுயமரியாதையுடன் வாழ்பவர்கள் நிறையப் பேர். மின் வண்டிகளில் இதனை சர்வசாதாரணமாகப் பார்க்கலாம். உதாரணமாக , பிள்ளைகளூக்கான சித்திரம் வரையும் புத்தகங்கள், சமையல் குறிப்புப் புத்தகங்கள், விலைமலிவான சீனப் பொம்மைகள், குழந்தைகளுக்கான வெளிநாட்டுப் பதிப்புப் புத்தகங்கள் ( கள்ளத்தனமாக Containerகளில் வந்தது). பத்து ரூவாய்க்கு பத்து பேனா முதலில் வந்தது இங்குதான்....

4. உதவும் குணம் : இது அவ்வளவு பரவலில்லை. ஆயினும் ஈரப்பசை இருக்கிறது. பசிமயக்கத்தில் தண்டவாளத்தில் விழப்போன கிழவரைப் பிடித்திழுத்துக் காப்பாற்றி, சூடான தேனீரும், பிஸ்கட்டும் வாங்கித் தந்த பின், சட்டையைச் சரிசெய்யபடி, தன் date-உடன் அடுத்த ரயிலில் ஏறிப் போன இளைஞனை எனக்குப் பரியச்சமுண்டு. செய்பவர்கள் சொல்லுவதில்லை. அலட்டுவதில்லை. இதற்கும் நேரமின்மைதான் காரணமாயிருக்கக் கூடும்.

5. காஸ்மோபொலிடன் சமூகம்: நிஜமான காஸ்மோபொலிடன் சமூகம் எனச் சொல்லவேண்டும். சிவசேனாவும், மராட்டி சமூகங்களும் lobby செய்யினும், தனி மனிதனளவில் இன்னும் மொழி, இன வெறி அவ்வளவாக வளரவில்லை. பாப்ரி மசூதி தகர்ப்பு,1993 குண்டு வெடிப்பு என நிகழ்வுகளில் மும்பை ஆடிப்போனாலும், கீழே விழவில்லை. குண்டு வெடித்த மறுநாள், அலுவலகங்களில் 90% வருகை பதிவாயிருந்தது.

6. கலை மதிப்பு: மும்பையில் இன்றும் இளைஞர்கள், இளைஞிகள் நாடகம் பார்க்கப் போகிறார்கள். நாடகங்களின் தரம் பலரகப்பட்டதெனினும், நல்ல நாடகங்களுக்கும் குறைவில்லை. அவற்றிற்கான வரவேற்பும் குறைவில்லை. பு.லெ. தேஷ்பாண்டே அறியாத மராட்டிய இளைஞன், ரஜினிகாந்த் தெரியாத தமிழ் மாணவனைவிடக் கேவலமாகப் பார்க்கப்படுவான். தமிழ்நாட்டில் நாம் எத்தனை நல்ல நாடகம் பார்த்திருக்கிறோம்/வந்திருக்கிறது ?

இன்னும் முன்னேறலாம். Plague வருவதற்கு முற்பட்ட சூரத் நகரமும், அதன்பின் அந்நகரின் மாற்றமும் நான் பார்த்தது தான். ஒரு தனிநபர் (Mr.Rao -Municipal commissioner)சூரத் நகரில் ஏற்படுத்திய மாற்றம் மும்பையில் இன்னும் வரவில்லை என்பது வருந்துதற்குரியதே.அரசியலும், தனிமனிதனின் அக்கறையின்மையும் முக்கியமான காரணங்கள்.

அன்புடன்
ஸ்ரீமங்கை

3 comments:

  1. நன்றி ஜெ,
    எழுதலாம். இந்த blog தொடங்கியதே, நான் எதாவது எழுதி பிற தளங்களின் வேகத்தைக் குறைக்காமல், ஒரிடத்தில் deviation Matters எழுதிப் பகிர்ந்துக்கலாமேன்னுதான். நீங்க சொன்னமாதிரி, பு.ந.கொன்றை விமர்சனங்களை இங்கே எழுதலாம். நல்ல suggestions. thanks !
    anpudan
    srimangai

    ReplyDelete
  2. நன்றி மூர்த்தி!

    ReplyDelete
  3. எனக்கு மும்பை அதிக பரிச்சயமில்லை. ஆனால் TIFR-க்கு செல்ல நேரிட்ட போது Gate way of India-வும், அதன் அருகில் இருக்கும் ஒரு art gallery-யும் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. அங்க்குள்ள மக்கள் நடப்பதை விட ஓடுவது கண்டு நான் பதைத்துப் போனேன் என்றுதான் சொல்வது சரி. மேலும் மும்பையில் இருக்கும் என் நண்பனது வாழ்க்கை முறையும் ஆச்சரியத்துக்குள்ளாக்கியது. அவன் காலையில் 4 மணிக்கு எழுந்து, 5 மணிக்கு கிளம்பி, 6 -8 மணிக்கு ஒரு டியூசன் வகுப்பு நடத்திவிட்டு(பள்ளி இறுதியாண்டு மாணவர்களுக்கு),9 மணிக்கு கல்லூரி சென்று மாலை 5 மணிக்கு ஜிம் சென்று, பின்பு மறுபடியும் 7-மணிக்கு வீட்டிற்கு கிளம்பினால் 9-மணிக்கு வீட்டை அடைவானாம். அவனது பெற்றோர் கல்லூரி,படிப்பு செலவுகளையும், இவன் தனது பாக்கெட் மணி செலவுகளையும் பார்த்து கொள்வார்களாம். நிச்சயம் இது எனக்கு ஒரு ஆச்சர்யத்தையும் ஒரு அதிர்ச்சியையும் தந்தது. ஆனால் அது நல்லது என்றே தோன்றுகின்றது.

    மேலும் உங்களது இந்த குறிப்புகள், பம்பாய் பற்றிய எனது எண்ணங்களுக்கு ஒரு பாசிட்டிவான பிம்பத்தை உருவாக்கி தருகின்றது.

    நன்றிகள்!!

    ReplyDelete