Thursday, February 17, 2005

Rail AthirvukaL இரயில் அதிர்வுகள்

இரயில் அதிர்வுகள்
--------------
போய்க்கொண்டேயிருக்கிறது
இத்தொடர் வண்டி
இங்கிருந்து அங்கும்
அங்கிருந்து இங்கும்

பழுப்பு நிற அழுக்கு
இணைவுப்பெட்டிகளினூடே
புதிதாய் நீலநிறப்பெட்டி
எப்போதும் அதே வரிசையில்
இல்லாது நகரும்.
மெல்லியதாய் முனகியபடி


முட மறுக்கும் , திறந்த கண்ணாடி சன்னல்
திறக்க மறுக்கும் மூடிய இரும்பு சன்னல்
பகுதி திறந்திருக்கும் சன்னல்களோவெனில்
இன்னும் அபத்தம்.

காற்று சமனப்படுத்திய பெட்டிகளோவெனில்
இருண்ட கண்ணாடி சன்னல்களூடன்
அனைவரையும் குருடாக்க்கும்-
வெளியிலும் உள்ளிலும் சேர்த்து..

இன்று.
எதிர் இருக்கையில் புது மணமக்கள்
அருகினில் கால் வீங்கிய கிழவி,
பின்புற இருக்கைகளில் குழந்தைகளின்
கூச்சல்...
எதுவும் நேற்றிருந்த வண்டியில் இருந்ததில்லை.
நாளை , அருகில் பைத்தியக்காரனாயிருக்கலாம்.

அலறி விரைந்த வண்டி புள்ளியாய்ப் போனபின்
தண்டவாளங்களின் சேர்க்கை விலகி
அடுத்த வண்டி வரும்வரை
சல்லிக்கற்களில்
இவ்வதிர்வுகள்....

தேடிக்கொண்டிருக்கிறேன்
நீண்ட பனைமரங்களினுடே
தெரியும் அந்த அமைதியான குடிசைபோலவொன்று
அதிர்வுகளற்றோ .
அன்றி சன்னமாய் அதிர்ந்தபடியோ..


அன்புடன்
ஸ்ரீமங்கை

4 comments:

  1. வருக! வருக!!
    நீங்க தானே ஸ்ரீமங்கை என்ற பெயரில் கவிதைகள் எழுதுவது. உங்களுக்கு எப்போதோ ஒரு மின்னஞ்சல் எழுதியதாக ஒரு எண்ணம். எப்படி இருந்தாலும், வருக வருக!!

    ReplyDelete
  2. நல்ல கவிதை!!

    இந்த வரிகள் என்னை கவர்ந்தன.
    "தேடிக் கொண்டிருக்கின்றேன்..."
    கலக்கல்.

    ReplyDelete
  3. நன்றி ஜெ,
    ரயில் ஒரு வழியாக் கிளம்பியிருச்சு. உங்கள் ஊக்கத்திற்கு நன்றி!

    பாலாஜி,
    நன்றி. உங்களது மின்னஞ்சல் தொடர்பு நன்றே நினைவிருக்கிறது. தனிமடல் இட்டிருக்கிறேன். பாருங்கள்.

    ரவியண்ணா!
    உங்களது blog பார்த்தேன். அப்படியே TEMPLATE காப்பியடிக்கத்தான் முயற்சி பண்ணினேன்! html சுட்டுப்போட்டாலும் வராது எனக்கு என்பதால், விட்டுவிட்டு,கிடைச்சதை வைச்சு எழுதிட்டேன்!

    ReplyDelete