வாயின்வழி உட்கொள்ளும் மருந்துமூலக்கூறுகள், பித்தநீருடன் சேர்ந்து புரதக் கலவை ( protein complex) உருவாக்கும். இந்த புரதக்கலவை எந்த அளவில் குடல் திசுக்களால் உறிஞ்சப்பட்டு, இரத்தத்தில் கலந்து, நோய் கொண்ட திசுக்களிடம் செல்கிறது என்பதையும், எத்தகைய வேதிவினை நிகழ்வுகள் நடக்கின்றன, அதன்மூலம் எத்தகைய, எத்தனைய புதிய மூலக்கூறுகள் உண்டாகின்றன என்பதையும் காண ADM உதவும். பின்னர் எவ்வாறு இம்மூலக்கூறுகள் வெளியேறுகின்றன எனபதை excretion analysis கண்டறியும். இத்தோடு முடிவதில்லை.
இந்த புரதங்கள் பிற மூலக்கூறுகளுடன் வேகமாக வினைபுரிந்து, தன்னிலை இழந்து செயலற்றுப்போவதை தற்கொலை என்பர் . இதனை இம்மூலக்கூறு தடுக்கும் சக்தி கொண்டுள்ளதா? ஆம் எனில் எத்தகைய சக்தி என்பதைக் காண்பது protein suicidal inhibition studies என்னும் ஆய்வுகள். இவை ADMEன் ஒரு பகுதி எனலாம்.
சரி, இவ்வாறு மருந்தாக வந்த மூலக்கூறுகள் பிற வேதிவினைகளால் புதிய வினைப்பொருட்களை உண்டாக்கி அதன்மூலம் உடலின் நல்ல பகுதிகள் தாக்கப்படுமானால்? இந்த பக்க விளைவுகளையும், இம்மூலக்கூறுகளின் நச்சுத்தன்மையை ஆய்வதும் toxicology ஆய்வுகள்.
மருந்தாக ஒரு வேதிப்பொருள் உடலில் நுழைந்தால் , உடல் அதனை எவ்வாறு வரவேற்கிறது/ எதிர்க்கிறது என்பதை உடல் இம்மூலக்கூறுகளை என்ன செய்கிறது என்பதன் மூலம் அறியலாம். இதனை Pharamaco Kinetics(PK) ஆய்வுகள் உறுதிசெய்யும்.
மாறாக, உடலில் நுழைந்த வேதிப்பொருள் உடலுக்கு என்ன செய்கிறது என்பதைக் காண்பது PharmacoDynamics (PD)ஆய்வுகள் உறுதிசெய்யும். இந்த PK/PD ஆய்வுகள் drug discovery நிலை மட்டுமல்லாது, உயிராய்வுகள் நிலையிலும் (Bio analysis)மேற்கொள்ளப்படுகின்றன.
கூகிளின் விளம்பரப் பலகையை எனது வலைப்பதிவில் வைத்திருக்கிறேன். என்ன விளம்பரம் வருகிறது என்பதை நான் சரியாகப் பார்ப்பதில்லை. எதுவோ வரும்.. போகும்..
ReplyDelete'மூலக்கூறிலிருந்து மருந்து வரை' என்னும் தொடரில் சில ஆங்கிலச் சொற்களுக்குத் தமிழ்ச் சொற்கள் தெரியாததால் அப்படியே இட்டிருந்தேன். Pharmacokinetics/ Pharmacodynamics என்பதை எழுதியிருந்தேன். இன்று சும்மா " என்னதான் விளம்பரம் இருக்கிறது?" எனப் பார்க்கையில் , Pharmacokinetics/ Pharmacodynamics க்குத் தேவையான ஒரு மென்பொருள் குறித்தான விளம்பரம் வந்திருந்தது. மிகவும் வேகமாக PK/PD கணக்கீடுகளைச் செய்யத் தேவையான மென்பொருள் என்றெல்லாம் எழுதியிருந்தது.. என்னடா இது? எனப் பார்த்தால் நான் பணிசெய்யும் கம்பெனியின், நான் விற்கும் ஒரு மென்பெருள்! அடப்பாவிகளா!
நன்றி சாரா,
ReplyDeleteகொஞ்சம் அலோபதி மருந்து செய்யும் முறை தெரியும் என்பதோடு என் சிற்றறிவு நின்றுவிடுகிறது. இதுவும் செய்யும் வேலை காரணமாக அறிந்தவொன்றே. மற்ற மருத்துவமுறைகள் தெரியாது. சில மருத்துவமுறைகள் மருத்துவசட்ட திட்டங்களுக்குள் அடங்குமெனினும், பெரும்பாலும் அவை பண்டு எழுதப்பட்ட , வழக்கத்திலாக்கப்பட்ட முறைகளை மட்டுமே கொண்டவை. இவற்றில் ஆராய்ச்சி உண்டெனினும், அனைத்து முறைகளும் வகையாக சரிசெய்யப்பட்டு ஆவணப்படுத்தப்படுவதில்லை. Compliance and validation are not a must for them.தெரிந்தவர்கள் சொன்னால் நன்று.
அன்புடன்
க.சுதாகர்